இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 6, 2011

அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி
‘சாலட்’ என்றால் பச்சடி என்று பொருளாகும். பச்சடிக் கீரை வகைகளுள் அரசனாய்த் திகழ்வது லெட்டூஸ் என்னும் இலைக்கீரை.
கீரை வகைகளுள் காய்கறி போன்றே பயன்படுகிறது, இக்கீரை, காரணம், இதில் 2.5% கார்போஹைடிரேட் அடங்கியுள்ளது.
நீண்ட நாள்களாக உள்ள மலச்சிக்கல், ஆஸ்துமா, தூக்கமின்மை, நீரிழிவு, தாய்ப்பால் சுரப்புக் கோளாறு, இரத்த சோகை ஆகிய வியாதிகளைக் குணமாக்குவதில் லெட்டூஸ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.
100 கிராம் லெட்டூஸ் கீரையில் கிடைக்கும் கலோரி 4.2 ஆகும். ஈரப்பதம் 93.4%, புரதம் 2.1%, கொழுப்பு 0.3%, தாது உப்புகள் 1.2%, நார்ச்சத்து 0.5%, மாவுச்சத்து 2.5% ஆகும். மேலும் 50 மி.கி. கால்சியமும், 2.8 மி.லி. பாஸ்பரஸ், 24 மி.கி. இரும்புச் சத்து, 30 மி.கி. மக்னீசியம், 10 மி.கி. வைட்டமின் ‘சி’, தியாமின், ரிபோபிளவின், நிக்கோடினிக் அமிலம் போன்றவை சிறிதளவும் உள்ளன. வைட்டமின் ‘இ’, ‘கே’ போன்றவையும் இக்கீரையில் உள்ளன.
எதிர்ப்புகளை அடக்கும் காரப்பொருள்!
கரப்பான் ஏற்படாமல் தடுக்கும் கீரை இது. சாதாரண உணவு போல் பயன்படுகிறது. இதில் உயர்ந்தரக ஆரோக்கியச் சத்துகள் அடங்கியுள்ளன.
காரப்பொருள், முக்கியமான பொருளாகவும், அதே நேரத்தில் அதிகமாகவும் இக்கீரையில் இருக்கிறது.
இதனால் இரத்தம் சுத்தமாகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது. உடலும் தொடர்ந்து அரோக்கியத்துடன் இருக்கிறது.
இக்கீரைச் செடி 1 மீட்டர் வரை வளர்கிறது. செடியின் இலைகள் 12 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை வளர்கிறது. இலைகள் நீண்டு முட்டை வடிவத்துடன் இருக்கின்றன. சிலவகை இலைகள் சுருள் சுருளாய் வளருகின்றன.
நன்கு பச்சை நிறத்தில் உள்ள கீரைகள்தாம் சிறந்தவை. தேவைக்கு ஏற்ப இலைகளைப் பறித்து உடனே சமைத்தால் அதிக அளவு வைட்டமின்கள் நமக்குக் கிடைக்கும்.
இதயக்தாக்குதல் ஏற்படாது!
மருத்துவக் குணங்கள் நிரம்பிய இக்கீரை உடலில் எல்லாப் பகுதிகளையும் தரமான முறையில் புதுப்பிக்கிறது.
உடலுக்கு இன்றியமையாத உப்புகளுள் ஒன்று மக்னீசியம், இக்கீரையில் அதிக அளவு மக்னீசியம் இருக்கிறது.
மூளையின் இயக்கம், நரம்புகளின் இயக்கம், தசைகளின் இயக்கம், இதயத்தின் இயக்கம் ஆகியவற்றிற்கு மக்னீசியம் தேவை. எனவே, நன்கு பச்சையாக உள்ள கீரைகளை மிக்ஸி மூலம் இரசமாக்கி அருந்தினால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் பலம் பெறும்.
இதே சாறு நுரையீரல்களையும் பலப்படுத்தும்.
நோய்களைக் குணமாக்க லெட்டூஸ் கீரையைச் சாறாகப் பயன்படுத்தினால் அதிக அளவு நன்மை கிட்டும்.
சிறுசிறு துண்டுகளாக வெட்டி பச்சையாகவே சாப்பிடலாம்.
சுத்தம் உடல் நலத்தைப் பாதுகாக்கும்!
கீரையை நன்கு கழுவிய பிறகே சமைக்க வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் சமைக்க வேண்டும். அதைப் பொரியல் செய்து சாப்பிடலாம். பருப்பு வகைகள் சேர்த்து பச்சடியாகச் சமைக்கலாம். இந்தக் கீரை கால் வேக்காடு வெந்தாலே போதும். அதற்கு மேல் வேக வைத்தால் தாது உப்புகளும், வைட்டமின்களும் அழிந்துவிடும். எனவே, பத்து நிமிடத்துக்குள்ளேயே கீரையை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
புத்தாண்டு அன்று சாப்பிடும் இலைக்காய்கறி!
அமெரிக்கா உட்பட பல மேலநாட்டினர் லெட்டூஸ் கீரையைப் புத்தாண்டு தினத்தன்று தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். அன்றைய தினம் இக்கீரை இடம் பெறுவது தனிச் சிறப்பு என்று கருதுகின்றனர்.
மனத்திற்கு உற்சாகத்தையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் இக்கீரை தருவதால் காலையில் இக்கீரைச்சாற்றை அருந்துவது நல்லது.
ஆஸ்துமா, மூச்சுத்திணறல், வாய்வுத் தொந்தரவு ஆகியன நீங்க இத்துடன் பருப்புச் சேர்த்துச் சமைத்து உண்ணவேண்டும்.
வாயைக் கட்ட வேண்டா!
மாவுச்சத்து குறைவாய் இருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாத உணவு இது. அதனால்தான் மருத்துவர்கள் லெட்டூஸ் கீரையை உணவாய் மருந்துச்சீட்டில் எழுதிக் கொடுக்கின்றனர்.
இக்கீரையில் செல்லுலோஸ் அதிக அளவில் இருக்கிறது. அதனால் உணவு, குடற்பகுதிக்குள் செல்ல எளிதில் வழி கிடைக்கிறது. குடலும் சுத்தப்படுத்தப்பட்டு மலச்சிக்கல் பூரணமாக நீங்குகிறது. நீண்டகாலமாய் மலச்சிக்கலால் அவதிப்படுவோர் ஒரு வாரத்துக்கு இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் அதிக அளவு நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் உடலிலும், மனத்திலும், புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாய்ச் செயல்படுவார்கள்.
அதிகாலை 3 மணி வரை தூக்கம் ஏற்படவில்லையா?
இக்கீரையில் ‘லெக்ட்டு கேரியம்’ என்னும் பொருள் இருக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்கக் கூடியது. இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் லெட்டூஸ் கீரைச் சாற்றை அருந்தினால் போதும். தலைவலி ஏற்பட்டால் ரோஜா எண்ணெயுடன் இக்கீரைச் சாற்றைக் கலந்து நெற்றியில் தடவினால் ஐந்து நிமிடங்களில் குணமாகிவிடும்.
இரத்த சோகையைப் போக்க அரிய டானிக்!
இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. கீரை உடனே செரிமானம் ஆகிவிடுவதால் இரத்த சோகை நோயாளிகளுக்கு இரத்தவிருத்தி ஏற்படுகிறது. அதிக அளவில் இரும்புச்சத்து உள்ள லெட்டூஸ் கீரை இரத்தசோகை நோயாளிகளுக்கு மிக உயர்ந்த டானிக் ஆகும்.
இனி அபார்ஷன் இல்லை!
இதே போல, கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இரத்த சோகையையும் லெட்டூஸ் கீரை குணப்படுத்துகிறது.
கர்ப்பம் தரித்தது முதல் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவது நிறுத்தும் வரை இக்கீரையைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இக்கீரையைச் சாப்பிட்டால் அபார்ஷன் ஏற்படாது. பிரசவத்திற்குப் பிறகு பாலும் நன்கு சுரக்கும். இக்கீரையில் உள்ள போலிக் அமிலம் இத்தகைய நன்மைகளைக் கர்ப்பிணிகளுக்கு அள்ளி வழங்குகிறது.
கர்ப்பிணிகள் போலிக் அமிலம் தங்கள் உணவில் அதிகரிக்க இன்னொரு முறையையும் பின்பற்றலாம்
லெட்டூஸ் கீரையுடன் காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி ஆகியவற்றையும் சேர்த்து பொறியலாகச் சமைத்து உண்டால் போதும்.
லெட்டூஸ் தாயகம் ஆசியாதான்!
லெட்டூஸ் கீரையின் தாயகம் இந்தியாதான். இக்கீரையில் 6 இனங்கள் உள்ளன. இலைக்கீரை என்று வழங்கப்படும் இதன் தாவர விஞ்ஞானப் பெயர் லெக்ட்டுகா ஸாட்டிவா என்பதாகும்.
எகிப்தியக் கல்லறைகளில் இக்கீரையின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. 4500 ஆண்டுகளுக்கு முந்திய கல்லறைகளில் இக்கீரையின் படத்தைக் காணலாம்.
இந்தியர்களைப் போலவே பண்டைய கிரேக்கர்களும் இக்கீரையை வயிற்றுப்புண், மூலச்சூடு முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினார்கள். இயேசு பிறப்பதற்கு 550 ஆண்டுகளுக்கு முன்பே லெட்டூஸ் கீரையைப் பெர்சியா தேசத்து அரசன் உணவாகப் பயன்படுத்தியிருக்கிறான்.
பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் ‘சலாட்’ கீரையாகப் பயன்படுத்த இதை அதிகம் பயிர் செய்து வந்தனர்.
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் இக்கீரை சீனாவில் அறிமுகமானது. இப்போது உணவு மருந்து மற்றும் மூலிகை மருந்தாகச் சீனாவில் பிரபலமாகியுள்ளது. கி.பி16-ஆம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் இக்கீரை அறிமுகமானது.
இப்போது ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் லெட்டூஸ் கீரை பயிராகிறது.
இக்கீரையை அடிக்கடிச் சாப்பிட்டு இரத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்வோம்! உடல் நலத்துடன் வாழ்வோம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites