இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, October 26, 2011

தூங்கப் போறீங்களா

தூக்கத்திற்கும் உடல் நலத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இதுபற்றி பல்வேறு ஆய்வுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, `சரியாக தூங்காதவர்களே பிரச்சினைகளில் ஈடுபடுகிறார்கள்' என்று கூறுகிறது. சரியாக தூங்குவது என்றால் எப்படி? தூங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பது பற்றி இங்கே...
* தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். தூங்குவதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. அதில் முதன்மையானது நேரந்தவறாமை. தினமும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். அதேபோல குறிப்பிட்ட நேரம் தூங்குவதும் அவசியம். குறைந்தபட்சம் தினமும் 6 முதல் 8 மணி நேரமாவது உறங்க வேண்டும்.
* எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பது பற்றியும் விதி இருக்கிறது. "கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது'' என்பது மருத்துவர்கள் சொல்லும் குறிப்பு. வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் மூளையின் ஓய்வுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வடக்கே தலை வைக்கக்கூடாது என்பார்கள்.
* தூங்குவதற்கு ஏற்ற படுக்கை பஞ்சு மெத்தைதான். `இலவம் பஞ்சில் துயில்' என்று நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்.
* படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி, வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
* இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலதுபுற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். இது நல்ல தூக்கத்தை தரும். உடம்புக்குத் தேவையான வெப்பம் கிடைக்கும். இப்படிப் படுப்பதால் நோய் விரைவில் குணமாவதாக கூறுவார்கள்.
* கவிழ்ந்து படுப்பது கூடாது. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை திரண்டு சிறுநீரக கற்கள் உருவாவதாக தெரிய வந்துள்ளது. குப்புறப் படுக்கும் போதே அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவா கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
* எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகல் தூக்கம் வாதத்தை வரவழைக்கலாம். இரவு தூக்கம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites