இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 3, 2011

இரட்டை தலையுடைய பாம்பு




அமெரிக்காவில் பால் பாம்பு முட்டையில் இருந்து இரட்டை தலை பாம்பு வெளிவந்தது. 10 ஆயிரத்தில் ஒரு முட்டை மட்டுமே இப்படி குஞ்சு பொரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல வண்ணங்களில் குறுக்கு கோடு போட்ட டிசைனில் பிறக்கும் பாம்பு ‘மில்க் ஸ்னேக்’. அமெரிக்கா, கனடாவில் அதிகம் காணப்படும். 2 அடி முதல் 5 அடி நீளம் வரை வளரக்கூடியது.
விஷம் கிடையாது. பூச்சிகள், தவளை, மண்புழு ஆகியவைதான் இதன் பிரதான உணவு. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிற வகையை சேர்ந்தது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பால் பாம்பு ஒன்று 2 மாதம் முன்பு முட்டையிட்டது. சன்ஷைன் என்ற பாம்புகள் காப்பகத்தில் இது பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த முட்டைகளில் இருந்து நேற்று குஞ்சுகள் வெளிவந்தன.





























ஒரு முட்டையில் இருந்து 2 தலை பாம்பு வந்தது. இதுகுறித்து மத்திய புளோரிடா பல்கலையின் உயிரியல் பேராசிரியர் டேனியல் பார்க்கர் கூறியதாவது: பால் பாம்பு குளுமை விரும்பி என்பதால் புதர் போன்ற பகுதிகளில் காணப்படும்.
பாலை உறிஞ்சி குடிக்க இதற்கு தெரியாது. மாட்டின் மடியில் வாயை வைத்து பாலை உறிஞ்சி குடிக்கும் என்று கூறப்படுவது தவறான தகவல். வெளிர் நிறம் என்பதாலேயே பால் என்ற பெயர். விஷம் இல்லாத வகை என்பதால் இந்த இனம் நீடித்து வாழ்வது அரிது. பொதுவாக பால் பாம்பு 12 ஆண்டுகள் வாழும்.
சரணாலயத்தில் வைத்து பாதுகாத்தால் 20 ஆண்டு வரை வாழும். 10 ஆயிரத்தில் ஒரு முட்டையில் இருந்துதான் இரட்டை தலை பாம்பு வெளிவரும். இரண்டு தலை என்பதால் மூளையும் இரண்டு. உடல் செயல்பாட்டுக்கு 2 மூளையில் இருந்தும் உத்தரவுகள் வரும்.
இரண்டு வாயும் சாப்பிடும். இடது தலைக்கு “மட்கா” என்றும் வலது தலைக்கு “லென்கா” என்றும் பெயர் வைத்திருக்கிறோம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites