இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

போலியோ




டாக்டர் பெஞ்சமின் சாண்ட்லர் என்பவர் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் போலியோ நோய் பற்றி பல ஆய்வுகள் செய்தார். 1951 இல் இவர் தன்னுடைய ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். அதில் போலியோ நோயை தூண்டுவதற்கு கீழ்க்காணும் மூன்று முக்கிய காரணங்களை கூறுகிறார்.

1. தட்ப வெப்பம்: வெயில் காலத்தில்தான் போலியோ நோய் பரவுகிறது. அதிக அளவில் சர்க்கரை உட்கொள்வதாலும் போலியோ தடுப்பு மருந்து கொடுத்த பின்பும் போலியோ நோய் அதிகம் பரவுகிறது. வெயில்காலத்தில் நீச்சல் குளத்தில் நீர் குளிர்ந்திருப்பதும் குழந்தைகளை குளிர்ந்த புல் தரையில் அமர வைப்பதும் கூட போலியோ நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான காரணங்களாகும்.


2. உடற்பயிற்சி: அளவான அல்லது தீவிரமான உடற்பயிற்சி.

3. தாகம் : 
குளிர்பானங்கள் பருகுவது, ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு பானங்கள் பருகுவது, சர்க்கரை அளவு குறைவதால் உடல் திசுக்களில் ஏற்படும் மாற்றம்.



சர்க்கரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்ட நாடுகளில் எல்லாம் போலியோ நோய் பரவி வந்தபோது சர்க்கரையை மிகவும் குறைந்த அளவில் சேர்த்துக்கொண்ட நாடுகளில் இந்நோய்த் தொற்று சுத்தமாக இல்லாதிருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு உணவில் சர்க்கரையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு நோய்த்தொற்றும் அதிகமாக இருந்தது என்கிறார் டாக்டர் சாண்ட்லர்.


அமெரிக்காவில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக போலியோ தடுப்பு மருந்து பரவலாக கொடுக்கப்பட்டதன் விளைவாக போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உயர்ந்தது. 1954இல் 273 ஆக இருந்த எண்ணிக்கை தடுப்பு மருந்து கொடுத்ததன் விளைவாக 1955இல் 2027 ஆக உயர்ந்தது. அதாவது 642 சதவீதம் உயர்ந்தது. தி பெடரல் சென்டர்பார் டிஸ்ஸீஸ் கண்ட்ரோல் என்னும் அமைப்பு அமெரிக்காவில் இன்று போலியோ நோய்த்தொற்று இருப்பதற்கான முக்கிய காரணம் உயிருள்ள போலியோ நோய்க்கிருமிகளை நோய்த் தடுப்பு மருந்தாக பயன்படுத்தியதுதான் என்று கூறுகிறது. 1973ஆம் ஆண்டிற்கும் 1983ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் போலியோவினால் பாதிக்கப்பட்டவர்களில் 87 சதவீதம் பேர்கள் போலியோ தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்கள். மிகவும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு போலியோவினால் தாக்கப்பட்ட அனைவருமே (இரண்டு பேர்களைத் தவிர) தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்கள்தான். (ஆதாரம் : ஹோமியோபதி லின்க்ஸ் -பிப்ரவரி 2003).

மேற்கண்ட ஆதாரபூர்வமான விஷயங்களை கருத்தில் கொண்டு கீழ்க்காணும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும்.



நம் நாட்டில் போலியோ நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ஒரே நாளில் நாடு முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது. போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதால் போலியோ நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை விரைவில் கண்டறியவேண்டும். வாய்ப்புள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும்.


மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் “உணவில் சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் வைட்டமின் ‘சி’ மிகுந்த உணவை தினமும் தவறாது எடுத்துக் கொள்ளவேண்டும்” என்பதையும் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக பிரச்சாரம் செய்யவேண்டும்.




0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites