இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது


ஆம்பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான்காரணம் என்ன?உப்பில் உள்ள சோடியம் (Sodium - Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறதுஆனால்அதேநேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பதுபலருக்கும் தெரியாது.

 இந்த விடயம் மருத்துவ உலகத்திற்கு நீண்டகாலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொதுமக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லைஅண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texas ஒரு ஆய்வு செய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டுசெய்யப்பட்ட ஆய்வுபிரஸர் , பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றியஇந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது.

இது உணவுப் பொட்டாசியத்தின் அளவிற்கு சமாந்தரமானதுஉணவில் பொட்டாசியம்குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறதுபிரஸரைஅதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்ட போதும் பிரஸருக்கும்பொட்டாசியத்துக்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்ததுஅதாவதுவயதுஇனம்,புகைத்தல்நீரிழிவுகொலஸ்ரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக்கணக்கில் எடுத்துக்கொண்ட போதும் பொட்டாசியம் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பதுதெரிந்ததுஇந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆபிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும்ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.

பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமன்றி நரம்புகள் மற்றும்தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானதுபிரஸரைக் குறைப்பதற்கான உணவுமுறையானது (Dietary Approaches to Stop Hypertension - DASH) உணவில் பொட்டாசியம்மக்னீசியம்கல்சியம் ஆகியன போதியளவு இருக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறதுஅதேநேரம்உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்புஉப்பும் குறைவாக இருக்கவேண்டுமென வலியுறுத்துகிறது.

அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்கவேண்டுமா?
நிச்சயமாக இல்லைஆனால்பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பதுநல்லதுஇறைச்சிமீன்பால்பாற்பொருட்கள்காய்கறிகள்பழவகைகள்தீட்டாத தானியங்கள்போன்றவற்றில் அதிகம் உண்டுதக்காளிஉருளைக்கிழங்குவாழைக்காய் , வாழைப்பழம்,சோயாஇளநீர் போன்றவை சில உதாரணங்கள்பொதுவாக பலவகையான காய்கறிகளையும்பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான அளவுபொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.

ஒருவருக்குத் தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறதுஆயினும்கடுமையானஉடற்பயிற்சி செய்பவர்கள் , விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனை விட அதிகம்தேவைப்படும்கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும்வியர்வையில்மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறதுஇதனால் உடலில் பொட்டாசியத்தின்அளவு குறைவடைந்து தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்படலாம்சிலவேளைஇருதயத் துடிப்புஒழுங்கீனமாகவும் கூடும்பொதுவாக கடுமையான உடற்பயிற்சியின் பின் ஒரு கப் ஒரேஞ்சுஜூஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்குஉண்பதினால் இதனைத் தடுக்க முடியும்.

கடுமையான வயிற்றோட்டம் , கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோய்அதீத மது பாவனை ,குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டைஏற்படுத்தக் கூடும்சில மலம் இழக்கி மருந்துகளும் , சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும்மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.
மீண்டும் பிரஸருக்கு வருவோம்பிரஸர் உள்ளவர்களேஉங்கள் உணவில் பொட்டாசியம்சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும் , உப்பைச் சற்றுக் குறைவாகவும்உட்கொள்ளுங்கள்அது நன்மை பயக்கும்பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இதுபொருந்தும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites