இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

பொம்மை தயாரிப்பது எப்படி

குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் என்பதோடு, வீடு, வாகனங்களை அலங்கரிப்பதிலும் பொம்மைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெரும்பாலான கல் லூரி மாணவிகளின் கைகளில் ‘செல்லÕ பொம்மைகள் தவழ்வதை பார்க்க முடியும். மரம், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டு வந்த பொம் மைகள், இப்போது செயற்கை பஞ்சு வைத்து மெத்து, மெத்தென்று பல்வேறு சைஸ்களில் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகள், இளசுகள், பெண்கள் மத்தியில்  மவுசு ஏற்பட்டிருக்கும் இந்த பஞ்சு பொம்மைகளை பொழுதுபோக்காகவோ, தொழிலாகவோ செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் பொம்மை தயா ரிப்பில் ஈடுபட்டுள்ள கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த கவிதா (27). அவர் கூறியதாவது: எனது கணவர் ஸ்டாலின் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். எம்.ஏ. முடித்த பிறகு வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டேன். கணவரோ,  ‘வெளியே எங்கும் வேலைக்கு போக வேண்டாம். வீட்டிலேயே ஏதாவது தொழில் செய்Õ என்றார்.

டிராயிங், எம்ப்ராய்டரி, தையல் ஆகியவற்றில் பயிற்சி இருந்ததால், பொம்மை தயாரிக்கலாம் என்ற ஐடியா தோன்றியது. மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி,  பொம்மை தயாரிக்க பயிற்சி பெற்றேன். புதிய புதிய பொம்மைகளுக்கான வடிவங்களை எனது கற்பனைத் திறனால் சார்ட் பேப்பரில் வரைந்து பொம்மைகளை  உருவாக்கினேன். வித்தியாசமான தோற்றம் மற்றும் அழகால் உடனடியாக பொம்மைகள் அனைத்தும் விற்றன. நல்ல லாபம் கிடைத்தது. பின்னர் நானே பொம்மை தயாரிப்பது குறித்து பயிற்சியளிக்க தொடங்கினேன். தினமும் 2 மணி நேரம் வீதம் 10 நாளில் கற்றுக் கொடுக்கிறேன். ஒருவருக்கு  ரூ.250 கட்டணம் வசூலிக்கிறேன். அதன் மூலமும் வருமானம் கிடைக்கிறது. விரைவில் கோவையில் பொம்மை கடை வைக்கவுள்ளேன். பொம்மை தயாரிப்பு  என் வாழ்வை உயர்த்தியுள்ளது.


உற்பத்தி செலவு

ஒருவர் ஒரு நாளில் 4  பெரிய அல்லது 6 சிறிய பொம்மைகள் வீதம் மாதம் சராசரியாக 100 பெரிய அல்லது 150 சிறிய பொம்மைகள் தயாரிக்கலாம். ரோமத் திலான துணி (ஃபர் கிளாத்) 10 மீட்டர் ரூ4000, வெல்வெட் கிளாத் 15 மீட்டர் ரூ1000, பைபர் காட்டன் 10 கிலோ ரூ1200, கண், காது, மூக்கு, வாய்  பொருத்த தேவையான பட்டன்கள் ரூ500, ஊசி ரூ10, சார்ட் பேப்பர் 30 ரூ.150, மார்க்கர் பேனா ரூ150, பொம்மையின் மாதிரி சார்ட் ரூ100, கூலி ரூ2600  என மாதத்துக்கு ரூ9,710 செலவு. சிறிய பொம்மையின் சராசரி அடக்கவிலை உழைப்புக்கூலி சேர்த்து ரூ64 ஆகிறது. பெரிய பொம்மைக்கு ரூ97 ஆகிறது.

லாபம் எவ்வளவு?

பேன்சி, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், கார் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். சிறிய பொம்மைகள் ரூ100  முதல் ரூ125 வரை, பெரிய பொம்மைகள் ரூ150 முதல் ரூ200 வரை விற்கலாம். இதன் மூலம் சிறிய பொம்மைகள் மூலம் அதிகபட்சம் ரூ19 ஆயிரம் அல் லது பெரிய பொம்மைகள் மூலம் ரூ20 ஆயிரம் வரை கிடைக்கும். மாதம் ரூ10 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். சிறிய பொம்மைக்கு ரூ35 முதல் ரூ65  வரை, பெரிய பொம்மைக்கு ரூ55 முதல் ரூ100 வரை லாபம் கிடைக்கும்.


அரை மணி நேரம் போதும்

பொம்மைகளின் மாதிரி வடிவங்களை உருவாக்கத் தேவையான சார்ட் பேப்பர்களைக் கொண்டு, மாதிரி சார்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது  தயாரிக்கக்கூடிய பொம்மைக்கு தேவையான வெல்வெட் அல்லது ஃபர் துணிகளை வைத்து வரைந்து, வெட்டிக் கொள்ள வேண்டும். அதை உள்புறமாக  கையால் ஊசி கொண்டு தைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தைக்காமல் இடைவெளி விட வேண்டும். அதை வெளிப்புறமாக புர ட்டி, தைக்காமல் விட்ட ஓட்டை வழியாக ஃபைபர் காட்டன் எனப்படும் செயற்கை பஞ்சை உள்ளே திணித்து பொம்மையை திடமாக நிரப்பி உருவமாக்க  வேண்டும்.

செயற்கை பஞ்சை உருவத்தின் சிறிய பாகங்களுக்கும் செல்லும் வகையில் கவனமாகத் திணிக்க வேண்டும். ஒரு இடத்தில் திடமாகவும், மற்ற இடத்தில் லூசாக வும் இல்லாமல் உருவத்தின் எல்லா இடங்களிலும் சீராக பஞ்சை திணிக்க வேண்டும். விடுபட்ட ஓட்டையை வெளிப்புறமாக, தையல் தெரியாத அளவு தைக்க வேண்டும். கண், காது, மூக்கு, வாய்க்கு உரிய பட்டன்களை, கற்களை பொருத்த  வேண்டும்.  பெரிய பொம்மை செய்ய ஒன்றரை மணி நேரமும், சிறிய பொம்மை செய்ய அரை மணி நேரமும் ஆகும்.

மூலப்பொருட்கள்

பொம்மையின் மாதிரி அட்டைகள் (சார்ட் பேப்பர்), பல்வேறு வண்ண வெல்வெட் கிளாத், ஃபர் கிளாத் (ரோமத்திலான துணி), ஊசி, நூல், கத்தரி, மார்க்கர்  பேனா, பைபர் காட்டன், காது, மூக்கு, கண், வாய் ஆகிய உறுப்புகளுக்கான பட்டன்கள், செயற்கை கற்கள். இவை ஸ்டேஷனரி கடைகளில்  கிடைக்கும். வீட் டில் ஒரு ஆள் அமர்ந்து செய்யக்கூடிய இடம் போதுமானது. வெல்வெட் துணியை தரை விரிப்பின் மீதே வெட்டலாம்.


4 comments:

தாங்கள் வருகைக்கு நன்றி திரு :கந்தசாமி அவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites