இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன



நாம் அதிகம் கேள்விப்படும் நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதுமான நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி (“ஹெப்பட்டைடிஸ் B”) நோயாகும். இதேபோன்ற A,B,C,D,E என்று ஐந்து வகை வைரஸ்கள் கல்லீரலை தாக்கி, மஞ்சள் காமாலையை உண்டாக்கும் என்றாலும இதில் B வகை வைரஸ்தான் ஆபத்தானது.

A, E வகை வைரஸ்கள், உணவின் மூலமும், கழிவுகள் மூலமும் பரவும். இவை சாதாரணமாகவே அதிக ஆபத்தில்லாதவை. நோய்தாக்கம் 10 நாட்களில் தானாகவே சரியாகும். மற்ற மூன்று வகைகள், ஏறத்தாழ ஒரேமாதிரி பரவும் தன்மை உடையவை.


B வைரஸ் பரவும்வகைகளையும், அவை ஏற்படும் தாக்கத்தையும் இனி காண்போம்.

நோய்க்காரணம்: 
(Hepatitis B (வைரஸ்) என்று பொருள் படும் HBV வைரஸ்தான் இந்நோயை உண்டாக்குகின்றன.

நோய் பரவும் முறைகள்:

  • நோய் தாக்கிய ஒருவர் பயன்படுத்திய ஊசியை, மற்றவர் போட்டுக் கொள்ளும்பொழுது, அவருக்கும் எளிதாக நோய் தொற்றும். பெரும்பாலும் போதை மருந்துகளை பயன்படுத்தும் இளைஞர்கள் இந்த முறையிலேயே நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
  • இரத்தம் கொடுக்கும்பொழுது, அதில் B வைரஸ் இருப்பின், இரத்தம் ஏற்றப்படுபவருக்கு நோய்த் தொற்றுஏற்படுகிறது. ஆனால் இரத்தம் கொடுப்பதில் உள்ள கடுமையான தரக்கட்டுப்பாடுகளினால் இம் முறையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இல்லை எனலாம்.
  • நோயுள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு ஏற்பட்டால் நோய்த் தொற்று ஏற்படும்.
  • நோயுற்ற தாய்மார்களிடமிருந்து, வயிற்றில் உள்ள குழந்தைக்கு, நோய் பரவும் வாய்ப்புகளும் அதிகம். இதன் காரணமாகநோய்த் தொற்று ஏற்பட்டு 30 முதல் 75 நாட்களில் நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.
 
நோயின் அறிகுறிகள்:
  • நோய்த் தொற்று ஏற்பட்டு 30 நாட்களில் முதல் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.ஆரம்ப நிலையில் மஞ்சள் காமாலை தெரியாது.
  • முதலில் களைப்பு, அசதி,பசியின்மை, குமட்டல், சில சமயங்களில் வாந்தி போன்றவை ஏற்படும்.
  • உடம்பின் மேல் பகுதியில் வலி இருக்கும்.
  • ஓரிரு நாட்களில் மஞ்சள்காமாலை தெரியத் துவங்கும்.
  • அடர்த்தி மிகுந்த, மஞ்சள் நிற சிறுநீர் வெளிப்படும்.
  • கண்களின் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக இருக்கும்.
  • நகக்கண்கள் மஞ்சள் நிறமடையும்.
  • சவ்வுத் தசைகள்,தோல் ஆகியவை மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்தும்.
  • களைப்பும், அசதியும் அதிகமாகும்.
  • பசியின்மை, வாந்தி அதிகமாகும்.
  • மலம் அதிக மஞ்சளாக வெளிப்படும்.
  • தோல் அரிப்பு ஏற்படும்.
  • உடலின்எடை வேகமாகக் குறையத் துவங்கும். சில சமயங்களில் 15 கிலோ வரை கூட எடை குறைவு ஏற்படும்.
  • கல்லீரல், மண்ணீரல் வீங்கத் துவங்கும். சாதாரண நிலையில்தொட்டுப் பார்த்தால் தெரியாத கல்லீரல் மண்ணீரல் நன்றாகத் தொட்டு உணரும் நிலையில் இருக்கும்.வலியும் இருக்கும்.
இந்நிலையில் மருத்துவ ஆலோசனையின் பேரில் மருத்துவம் செய்து கொண்டால்நோய் குணமடைய நல்ல வாய்ப்பு உண்டு.

 

சரியான சிகிட்சை செய்யா விட்டால்
  • வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விடுவதால், நோய்த் தொற்று அதிகமாகும்.
  • கல்லீரல் செல்கள்அதிக அளவில் அழற்சி அடையும். சிறிது சிறிதாக அழியத் துவங்கும். கல்லீரல் செல்கள் அழிவடைவதால், கல்லீரலின் செயல்பாடுகள் தடை ஏற்படும்.
  • உடலின் உதிரத்தில் பரவும் வைரஸ்களால் மற்ற உறுப்புகளும் பாதிப்படையும்.
  • மூளையும் பாதிப்படையும். மூளைக் காய்ச்சல் ஏற்படும்.
  • அதிக அளவு தலைவலி, காய்ச்சல், மூட்டு வலி, வலிப்பு போன்றவைஏற்படும்.
  • உடல் முழுதும் தோல் அரிப்பு அதிகமாகும்.
  • உணவு முழுமையாக ஏற்க முடியாத நிலைஏற்படும்.
  • நோயாளி மிகவும் ஆபத்தான நிலையை அடைவார்.
  • இந்நிலையிலிருந்து பாதிப்படையும் கல்லீரல் செல்கள் மீண்டும்சீரடையும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும்.
  • இரத்த ஓட்டமும், சிகப்பணுக்களின் தோற்றமும், சிதைவும் பாதிப்படையும். அதனால் இரத்தத்தின்செயல்பாடுகள் பாதிப்படையும். அதன் தொடர்ச்சியாக உடலின் மற்ற அவயவங்களின் செயல்பாடில்பாதிப்பு ஏற்படும்.
  • நோயாளி மரணத்தின் எல்லையை தொடுவார்.
சரியான மருத்துவமும், சரியான அறிவும் இல்லாத நிலையில், நோய் முற்றி, நோயாளியின்மரணம் தவிர்க்க முடியாத நிலையை அடைய ஏதுவாகும். ஆனால் ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்து கொள்வதால், முழுக் குணமடையும் வாய்ப்பு ஏற்படும்.
சில நோயாளிகளுக்கு ஆபத்து அதிகமாகும் நிலைக்கு முன்பு, கல்லீரல் பாதிப்பும், கல்லீரல் செல்கள் அழிவும், கல்லீரல் புற்று நோயாகவும் மாறும்


http://newyorkmedicaljournal.org/1/Articles/bengualid12-07fig1.gif

நோயறிதல்:  
ஆய்வக சோதனைகள் மூலம் எளிதாக நோயை அறிய முடியும். இரத்தத்தில் கலந்துள்ள Sereen Bilirubin அளவு சாதாரணநிலையை விட மிக அதிகமாக இருக்கும். Antibodies அதிக அளவில்இரத்தத்தில் இருக்கும். உடனடியாக மருத்துவம்செய்வித்தல் வேண்டும்.

மருத்துவம்:
  • நோயாளிகளுடன் தொடர்புகளை கட்டுப்படுத்துதல் வேண்டும்.
  • நோயின் அறிகுறிகள் தெரியத் துவங்கிய உடனே, கட்டாய ஓய்வு, உணவுக் கட்டுப்பாடு உறுதியாக பின்பற்றப்படவேண்டும்.
  • எண்ணெய், கொழுப்புபதார்த்தங்களையும், உணவு வகைகளையும் முழுமையாகபயன்படுத்தக்கூடாது. தாளிப்பதற்கு பயன்படும் எண்ணெய் அளவுகூட உணவில் சேர்க்கக்கூடாது.
  • மாவுச் சத்து அதிகம் உட்கொள்ளுவதன் மூலம் இழந்த சக்தி பெறலாம்
  • நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை அழித்துவிட வேண்டும்.
  • நோயாளியின் எதிர்ப்புச் சக்தி குறைவதால் மற்ற நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். எனவே மருத்துவகண்காணிப்பு மிகவும் அவசியம்.
  • கல்லீரல் மேன்மேலும் பாதிப் படைவதைத் தவிர்ப்பதற்கும் மருத்துவகண்காணிப்பு உதவும்.
  • நோயைக் குணப்படுத்த நேரடியாக மருந்துகள் இல்லாவிட்டாலும், நோயாளியை தகுந்த முறையில் ஓய்வு, நல்ல உணவு, கல்லீரலை பலப்படுத்தக்கூடிய மருந்துகள், நோயாளியின் உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்புச்சக்தி ஆகியவை, நோயாளி குணமடைய உதவிசெய்யும்.
  • சித்த மருத்துவத்தில் கூறப்படும் ‘மஞ்சள் கரிசிலாங்கண்ணி’, கீழா நெல்லி ஆகியவை சிறந்த பயனைத் தரும்.இதில் கீழாநெல்லி இலைகளை அரைத்து உணவோடு சேர்த்து உண்ணலாம். இது மஞ்சள் காமாலை நோயில்,நோய்த் தொற்றை அழிக்க உதவும். மஞ்சள் கரிசிலாங்கண்ணி, பாதிப்படைந்த கல்லீரல் செல்களை புதுப்பிக்க உதவும்.
வருமுன் காத்தல்:  
B வைரஸ் கல்லீரல் அழற்சி நோய் ஆபத்தான ஒருநோயாக இருந்தாலும், தடுப்பூசிகள் உள்ளன.இந்த தடுப்பூசிகள் முழுமையாக நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை வாய்ந்தவை. அதை போட்டுக்கொள்ளுதல் அவசியம். மருத்துவத் துறையில், எல்லா மக்களும்இதை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.




Thnxs;http://reghahealthcare.blogspot.com/2011/01/b-hepatiti-b.html

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites