இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 7, 2011

கொத்தமல்லி




உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளேநாம் அன்றாடம்பயன்படுத்தும் கீரைகாய்கள்கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப்பயன் கொண்டவையாகும்
மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும்இந்த மூலிகைகள் நமக்குஉதவுகின்றனஇதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்மிளகுசீரகம்பூண்டு,பெருங்காயம்கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்துஉண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்
கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப்பொருள் ஆகும்இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர்நினைப்பதுண்டுஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப்படுகிறதுஎன்பதை அறிந்திருக்க மாட்டோம்.
நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்குகொத்தமல்லிகறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.
கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள்அதைநாமும் வாங்கி பயன்படுத்துவோம்ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனை அறிந்ததில்லை.
பசுமையானமணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையானவிதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லிஇதன் விதைகளுக்கு தனியா என்று பெயர்.இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.
நஞ்சைபுஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்இதன் விதை மிகவும்மருத்துவப் பயன் கொண்டதுஇலைபூகாய்வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது.
இது கார்ப்புச் சுவை கொண்டதுகுளிர்ச்சித் தன்மையுடையதுசிறுநீர் பெருக்கல்உடல் வெப்பம்சமன்படுத்தல்வயிற்று வாயுவகற்றல்செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக்கொண்டது.
  • கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
  • சின்ன வெங்காயம் - 5
  • மிளகு - 10
  • சீரகம் - 2 டீ ஸ்பூன் 
  • பூண்டு - 5 பல்
  • மஞ்சள் தூள் - 1/4  டீ ஸ்பூன் 
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • உப்பு -  தேவையான அளவு
எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலைமாலைடீகாபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால்உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.
கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலைபுதினாசின்ன வெங்காயம்பூண்டுஇஞ்சிதேங்காய்சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன்பித்த அதிகரிப்பினால்உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சிவடிகட்டி பால்சர்க்கரை கலந்து காலைமாலை சாப்பிட இதய பலவீனம்மிகுந்த தாகம்,நாவறட்சிமயக்கம்செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்தமல்லி சூரணம்:
  • கொத்தமல்லி - 300 கிராம்
  • சீரகம் - 50 கிராம்
  • அதிமதுரம் - 50 கிராம்
  • கிராம்பு - 50 கிராம்
  • கருஞ்சீரகம் - 50 கிராம்
  • இலவங்கப்பட்டை - 50 
  • கிராம்சதகுப்பை - 50 கிராம்
இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளைகற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும்இந்த சூரணத்தை காலைமாலை 1 தேக்கரண்டிசாப்பிட்டால் உடல் சூடுசெரியாமைவாந்திவிக்கல்நாவறட்சிஏப்பம்தாது இழப்பு,நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும்விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.
காய்ச்சலாலும்குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால்நாவில் சுவையின்மை ஏற்படும்இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவதுஇதற்கு,கொத்தமல்லி இலைசீரகம்சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்துஅருந்தினால் சுவையின்மை நீங்கிபித்த கிறு கிறுப்பு நீங்கும்.
கொத்தமல்லியின் பயன்கள்:
  • சுவையின்மை நீங்கும்
  • வாய்ப்புண்வயிற்றுப் புண் குணமாகும்.
  • செரிமான சக்தியைத் தூண்டிஉண்ட உணவை நன்கு ஜீரணிக்கச் செய்யும்.
  • வயிற்றுப் பொருமல்வாயுக் கோளாறுகளைப் போக்கும்மலச்சிக்கல் நீங்கும்.   இதில் உள்ள நார்ச்சத்து  மலக்குடலில் உள்ள தேவையற்ற கசடுகளை வெளியேற்றும்மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
  • புளித்த ஏப்பம்நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
  • கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்கண் சூடு குறையும்.
  • சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்மூக்கடைப்புமூக்கில் நீர்    வடிதல்தொண்டைக்கட்டுவறட்டு இருமல் நீங்கும்.
  • உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும் போது   கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல்இது வீக்கமோசுருக்கமோ அடைந்து பாதிக்கப் பட்டால்உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்இதனால்     கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
  • நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்
  • மன அமைதியைக் கொடுக்கும்.
  • உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.
  • விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.
  • நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம்தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும்இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும்இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • வாய் நாற்றத்தைப் போக்கும்.
  • பல்வலிஈறுவீக்கம் குறையும்.
  • சிறுநீர்வியர்வையைப் பெருக்கும்.



0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites