இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, January 15, 2012

புது மணத் தப்பதிகளா நீங்கள்? முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்.....

*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.

* மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

*முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

*அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

*முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.

* உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.

* நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

* காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட்
தடவிக் கொள்ளுங்கள்.

* உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.

* கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

* படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

* முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள்.

* முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

* அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.

* உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.

* முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக மாக்கத்தான் செய்யும்.

* வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

* உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites