இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, January 27, 2012

சுரினாம் நாட்டில் காணப்படும் அரியவகை புதிய உயிரினங்கள்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுரினாம் நாட்டில் அடர்ந்த காட்டுப்பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு மற்ற நாடுகளில் இல்லாத ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இது சம்பந்தமாக சர்வதேச உயிரியல் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அப்போது இதுவரை கண்டுபிடிக்கப்படாத 40 விதமான உயிரினங்களை கண்டுபிடித்து உள்ளனர்.
தவளை , மீன், வண்ணத்து பூச்சி போன்றவற்றில் பல புதிய வகை உயரினங்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் வித்தியாசமான தவளை, பல வண்ணங்களை கொண்ட வெட்டுக்கிளி , கைகள் போன்ற அமைப்பு உள்ள கெழுத்தி மீன் போன்றவை முக்கியமானதாகும்.
மேலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்படாத இன்னும் ஏராளமான உயிரினங்கள் அங்கு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.










0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites