இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, January 28, 2012

சணல் பொருள்கள் தயாரிப்பது எப்படி

சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படு கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை போத்தனூரில் சணல் பைகள் தயாரித்து வரும் பரிதா. அவர் கூறியதாவது: எனது அக்கா அனார்கலி 10 ஆண்டுக்கு முன்பு மத்திய சணல் வாரியம் அளித்த பயிற்சியில் சணல் பொருட்கள் தயாரிக்க கற்று கொண்டு சிறிய அளவில் விற்பனை செய்து வந்தார்.இதையே பெரிய அளவில் செய்ய முடிவு செய்து, வெற்றி மகளிர் சுய உதவி குழுவை துவக்கி, கடன் உதவி பெற்றோம். 3 தையல் மெஷின்கள் மூலம் பல்வேறு சணல் பொருட்களை தயாரித்தோம். மகளிர் குழு தலைவியாக நான் உறுப்பினர்களுடன் சேர்ந்து தைக்கும் பணியில் ஈடுபடுகிறேன். மாதம் ரூ.1.6 லட் சம் மதிப்பிலான பொருட்கள் உற்பத்தி செய்கிறோம். பொருட்களை விற்க டவுன்ஹால் மாநகராட்சி வணிக வளாகத்தில் கடை நடத்தி வருகிறோம். உற்பத்தியில் பாதி அங்குதான் விற்பனையாகிறது. மீதியை வெளியிடங்களுக்கு சப்ளை செய்கிறோம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றன. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். உற் பத்தி, கண்காட்சி, கடை ஆகியவற்றில் சுழற்சி முறையில் பணிபுரிகிறோம். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறுகிறோம்.  தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல்
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம். அனைத்து வகை சணல் பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக் வருகிறேன். என்னிடம் கற்று பலர் தொழில் துவங்கியுள்ளனர்.


உற்பத்தி செலவு

சணல் துணியை கொண்டு 35 வகை பொருட்களை உற்பத்தி செய்யலாம்.  ஒரு நபர் ஒரு நாளில் 12க்கு 12 இஞ்ச் அளவுள்ள 10 ஹேண்ட் பேக், 10க்கு 10 அளவுள்ள 50 தாம்பூல பை, 13க்கு 12 அளவுள்ள 10 காலேஜ் பேக், 13 இஞ்ச் அளவுள்ள 25 வாட்டர்பேக், 3 ஷெல்ப் உள்ள 25 லெட்டர் பேட், 12க்கு 10 அளவுள்ள 30 லஞ்ச் பேக், 3 மடிப்புள்ள 15 பர்ஸ், 13க்கு 9 அளவுள்ள 25 பைல், 13க்கு 9 அளவுள்ள 10 லேப்டாப் பேக், 18க்கு 12 அளவுள்ள 20 ஷாப்பிங் பேக், 10க்கு 8 அளவுள்ள 20 சுருக்கு பை, 40 பென்சில் பவுச், 30 கிட் பவுச், 30 மொபைல் பவுச் இவற்றில் ஏதாவது ஒரு வகையை தயாரிக்க முடியும்.எதை உற்பத்தி செய்தாலும் ஒரு நாள் செலவு ரூ.1000. மாதம் 25 நாட்களுக்கு ரூ.25 ஆயிரம். இதர செலவு ரூ.5 ஆயிரம் என மாத உற்பத்திக்கு ரூ.30 ஆயிரம் தேவை.

வருவாய்: மாதம் ரூ.25 ஆயிரம் செலவில் தயாரான பொருட்களை சில்லரையாகவும், மொத்தமாகவும் 75 சதவீத லாபத்தில் விற்கலாம்.  இதன் மூலம் வருவாய் ரூ.43 ஆயிரம், லாபம் ரூ.18 ஆயிரம். விற்பனை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் தையல் மெஷி ன்கள், கூலியாள் மூலம் உற்பத்தி மேற்கொண்டால் லாபம் கூடும்.

சந்தை வாய்ப்பு: வீட்டில் வைத்தோ, கடை போட்டோ விற்கலாம். கல்லூரி, அலுவலகங்களில் லேப்டாப் பை, பைல் தயாரிக்க ஆர்டர் எடுக்கலாம். திருமண வீட்டில் விருந்தினர்களுக்கு வழங்கும் தாம்பூல பைக்கு ஆர்டர் வாங்கலாம். அரசு மற்றும் தனியார் கண்காட்சிகளில் விற்பதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பேன்சி, டிபார்ட்மென்டல் கடைகள் மற்றும் பிரத்யேக ஹேண்ட் பேக் கடைகளுக்கு சப்ளை செய்யலாம்.

உற்பத்தி பொருட்கள்: சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் ரூ.50 முதல் ரூ.200 வரை. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 8 இஞ்ச் ஹேண்ட் பேக் 4 தைக்கலாம். தையல் நூல் (1 ரோல் ரூ.32. 100 பை தைக்கலாம்), ஜிப் (மீட்டர் ரூ.3. 5 பை தைக்கலாம்), ஜிப்ரன்னர் (144 ரூ.90. 144 ஜிப் தைக்கலாம்) ஸ்டீல் பட்டன், லாக் பட்டன்(1க்கு ரூ.5), ஹேண்டில் காட்டன் ரோப் (கிலோ ரூ.80. 100 பை தைக்கலாம்)

கிடைக்கும் இடங்கள்: சணல் துணி கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு மொத்தமாக கொள்முதல் செய்யலாம். விலை குறைவு. இதுதவிர சென்னை, புதுவையில் கிடைக்கும். காட்டன் ரோப் ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், பவானி ஆகிய இடங்களில் கிடைக்கிறது. மற்ற பொருட்கள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது.

தயாரிக்கும் முறை

சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும். தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும்.

லெட்டர் பேடு தயாரிக்க லேமினேஷன் சணல் துணியை பயன்படுத்த வேண்டும். முன்புற துணிக்கு சோபா தயாரிக்க பயன்படுத்தப்படும் கெட்டியான துணியை பயன்படுத்த வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை. இலவச பயிற்சி: மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் மத்திய சணல் வாரிய கிளைகள் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டண முறையில் தனியார் பயிற்சி அளிக்கின்றனர். முதலீடு: உற்பத்தி, இருப்பு வைத்தல், விற்பனைக்கு என 20க்கு 10 அடி கொண்ட தடுப்பு அறை போதும். பவர் தையல் மெஷின் ரூ.10 ஆயிரம், கட்டிங் டேபிள்  ரூ.3 ஆயிரம், கத்தரிக்கோல் ரூ.250, ரேக், ஹேங்கர்கள் ரூ.6,750. முதலீடு ரூ.20 ஆயிரம். வீட்டில் ஏற்கனவே தையல் மெஷின், டேபிள் போன்றவை இருந்தால் ரூ.10 ஆயிரம் போதும்.

2009ல் கயிறு பொருட்களின் ஏற்றுமதி 26 % அதிகரிப்பு

கொச்சி : 2009-10ம் நிதி ஆண்டில், நாட்டின் கயிறு பொருள்கள் ஏற்றுமதி ரூ.804 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ரூ.700 கோடி மதிப்பிற்கே கயிறு பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், முந்தைய நிதி ஆண்டை விட ஏற்றுமதி அளவு 25.64 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், கடந்த 2008-09 ம் நிதி ஆண்டில் கயிறு பொருள்களின் ஏற்றுமதி ரூ.639 கோடியாக இருந்தது. சென்ற நிதி ஆண்டில், 2,94,508.05 டன் அளவிற்கு கயிறு மற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதியாகி உள்ளன. மொத்த கயிறு பொருள்கள் ஏற்றுமதியில், அமெரிக்காவிற்கு 35 சதவீதம் ஏற்றுமதியாகி உள்ளது. இந்தியாவிலிருந்து 100க்கும் அதிகமான நாடுகளுக்கு கயிறு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கயிறு பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், சணல் பொருள்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்று இப்பொருள்களுக்கும் ஏற்றுமதியில் சலுகைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கயிறு வாரியத்தின் தலைவர் வி.எஸ். விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

Thnxs:http://www.dinakaran.com/tamilmurasu/Tamil_News.asp?id

8 comments:

where is the training institute

தாங்கள் வருகைக்கு நன்றி இந்த முகவரி சென்னை வாசிகள் மட்டும்
சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம், மகளிர் திட்டம், வங்கிகள், கார்பரேட் அலுவலகங்கள் மூலமும் பயிற்சியளித்திருக்கிறார்.

மற்றவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகவும்

where is the traing institute in salem

where is the training institute in salem

where is the training institute in salem

தாங்கள் வருகைக்கு நன்றி இந்த முகவரி சென்னை வாசிகள் மட்டும்
சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியம், மகளிர் திட்டம், வங்கிகள், கார்பரேட் அலுவலகங்கள் மூலமும் பயிற்சியளித்திருக்கிறார்.மற்றவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகவும்

கடைஅட்ரஸ் என்ன எங்கே

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites