இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, January 29, 2012

ஆயுள் அதிகரிக்கும்

தம்பதியரிடையே ஏற்படும் நெருக்கமான அன்னியோன்யமான செயல்களால் மன அழுத்தம் குறைவதோடு உயர்ரத்த அழுத்த நோய் குணமடைவதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தம்பதியரிடையே ஏற்படும் சர்வரோக நிவாரணியாக உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு வார காலத்திற்கு தம்பதியர் ஒருவரை ஒருவர் கைகளை இறுகப்பற்றுவது முதல் உறவு வரையிலான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் உடல் ரீதியான தொடர்பால், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவாக இருப்பது தெரிய வந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி
உறவின் மூலம் டிஹெஇஏ எனப்படும் (Dehydroepiandrosterone) ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மேலும் பாதிப்படைந்த தசை செல்கள் சரியாவதோடு, சருமத்திற்கும் பளபளப்பு ஏற்படுகிறது.
ஆயுள் அதிகரிக்கும்
உறவின் போது ஏற்படும் ஆர்கஸம் வாழ்வின் ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தம்பதியரின் நெருக்கம், உடலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துதோடு, கண்ணின் மணியை விரியச்செய்கிறது. இதனால் பார்வையை விரிவடைகிறது. நீரிழிவு போன்ற நோய்களைக் கூட தாம்பத்ய உறவு குணப்படுத்துகிறதாம். புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துவதோடு அறவே குணப்படுத்தவும் செய்கிறதாம். மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூளைக்கு புத்துணர்ச்சி
உறவின் போது ரத்த ஓட்டம் அதிகரித்து மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் மூளை புத்துணர்ச்சியடைவதோடு உடல் உறுப்புகள் சுறுசுறுப்படைகின்றன. உடலில் கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுவதால் உடலும், உள்ளமும் லேசான உணர்வை பெறுகின்றன.
இளமை தரும் மருந்து
30 நிமிட உறவானது உடலில் 85 கலோரிகளை எரித்து உடலை கட்டுகோப்பாக வைக்கின்றதாம். எனவே செக்ஸ் மிகச்சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது உடல் ரீதியான பிரச்சினைகளை போக்குவதோடு உள்ளரீதியான இறுக்கத்தையும் அகற்றுகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து.
வலிநிவாரணி
தாம்பத்யமானது வலி நிவாரணியாக திகழ்கிறது. உறவின் மூலம் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இது தலைவலி, தசைவலி போன்றவைகளையும் நீக்கும் வலிநிவாரணியாகவும் விளங்குகிறது.
ரத்த அழுத்தம் கட்டுப்படும்
தாம்பத்ய உறவின் மிக முக்கியமான நன்மையாக மன அழுத்தம் குறைவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வில் மன அழுத்தமான சூழலில் இருந்த தம்பதியர் உறவிற்குப்பின் தங்களின் மன அழுத்தம் குறைந்த தாக தெரிவித்தனர். அவர்களின் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே காதலுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. நெருக்கமான உறவு கொள்வதன் மூலம் , மன அமைதி ஏற்படுவதோடு ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites