இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, September 26, 2012

கறி மசாலா பொடி

இன்று அவசர காலத்தில் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஆனால் வீட்டில் இருந்து சமையலுக்கு தேவையா பொருள்கள் தயார் பண்ணுவதில் நேரம் இல்லை .எனவே இது போன்ற பொருள் மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு இருக்கும் .குறைந்த முதலிடு இதற்கான இயந்திரம் மற்றும்  உதிரி பாகம்  தமிழ் நாட்டில் கிடைக்கும் .அணை வரும் விட்டில் இருந்த படி இந்த தொழில் செய்யலாம் .

முதலீடுகட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.நிரந்தர முதலீடு: பேக்கிங் மெஷின் ரூ.200000 லட்சம் ஆகும் .  பயிற்சி  தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.விற்பனை வாய்ப்பு சுற்றுச் சூழல் அக்கறை  காரணங்களால் பெரும்பாலான பொருள்கள் பாலீதின் கவரில் அடைத்து  வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.  டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால்  மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.தேவையானவை:பெருஞ்சீரகம் சோம்பு  - 1  1 /2  கப்தனியா / விதை கொத்தமல்லி  - 1 கப்சீரகம்  - 1/4 cup
மிளகு  - 1/4 cup
பிரிஞ்சி இலை - 4
பட்டை  - 3 நீள சுருள்கள்ஏலக்காய்  - 1/4 cup
லவங்கம் / கிராம்பு  - 2 tbsp
ஜாதி பத்திரி  - 1
ஜாதிக்காய்  -  1/4 கொட்டைஅன்னாசி பூ   - 3
கல்பாசி - 1/2 cup
உலர்ந்த ரோஜா மொட்டு  - 5
முந்திரி  - 10
கசகசா - 2 tbsp
செய்முறை:முந்திரியை வாணலியில் வறுக்கவும்.  மேற்சொன்னவற்றில் முந்திரி தவிர அனைத்தையும் ஒரு நாள் முழுக்க வெயிலில் காய வைத்து மெசினில் / மிக்சி யில் நைசாக திரிக்கவும்.  (அல்லதுஅனைத்தையும் வெறும் வாணலியில் சிறு தீயிலும் வறுக்கலாம். பொடி செய்யும் முன் நன்றாக ஆற விடவும்அரைத்த பின்னும் நன்கு ஆற வைத்து காற்று-புகா பாத்திரத்தில் சேமிக்கவும்.நைசாக திரிக்காமல் கொஞ்சம் பரபர வென திரித்தால் ரொம்ப நாள் வாசனை குறையாது.மூலப்பொருள்  வேலைகள் =

Monday, September 24, 2012

இட்லி வியாபாரம்

‘இட்லி வியாபாரமா?- தனது விசிட்டிங் கார்டை கொடுத்து அறிமுகப்படுத்திக் கொண்ட அத்தனை பேரிடமும், இனியவன் எதிர்கொண்ட முதல் கேள்வி இதுதான்! இன்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பெரும்புள்ளிகள் தேடும் முக்கிய இடத்தில் இருக்கிறார் இனியவன். இட்லி வியாபாரமா என இளக்காரமாகப் பார்த்த அதே பிசினஸ்தான், இன்று அவரை இத்தனை உயரம் தொட வைத்திருக்கிறது. ‘மல்லிப்பூ இட்லி’ என்கிற பெயரில் இவர் தயாரிக்கிற இட்லி, ரொம்பவே ஸ்பெஷல்! பிரபலங்கள் வீட்டு விசேஷ விருந்துகளில் இனியவனின் இட்லிக்கே முதலிடம்!

‘‘பெரிசா படிக்கலை. எட்டாவது படிச்சிட்டு தொழிலதிபராகியிருக்கிறவன் நான். அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு பெரிய குடும்பம். இட்லி, தோசை, பூரிங்கிறதெல்லாம் அப்ப தினசரி கிடைக்காது. அந்தளவு வறுமை. கோயம்புத்தூர்ல ஆட்டோ ஓட்டிக்கிட்டிருந்தேன். அங்க இட்லி வியாபாரம் பண்ணிட்டிருந்த சந்திராம்மாவோட அறிமுகம் கிடைச்சது. அவங்க பண்ற இட்லியை ஓட்டல்களுக்கு சப்ளை பண்ற பொறுப்பு வந்தது. அந்த நேரத்துல சென்னைலயும் அதே மாதிரி இட்லி வியாபாரம் பண்ண ஒரு வாய்ப்பு அவங்களுக்கு வந்தது.

சந்திராம்மாவோட கணவர்தான் முதல்ல சென்னைக்கு சப்ளை பண்ணிட்டிருந்தார். அவருக்கு முடியாத ஒரு கட்டத்துல, அந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுத்தார். கொஞ்ச நாள் அதைக் கவனிச்சுக்கிட்ட அனுபவத்தோடயும், சந்திராம்மாவோட ஆசிர்வாதத்தோடயும், சென்னைல தனியாவே இட்லி வியாபாரத்தைத் தொடங்கினேன். இன்னிக்கு என் குடும்பத்துல மட்டுமில்லாம, என்கிட்ட வேலை பார்க்கிற நூற்றுக்கணக்கான ஆட்களோட குடும்பங்களுக்கும் அதுதான் ஆதாரம்’’ என்கிற இனியவன், இந்த இட்லி வியாபாரத்தை வித்தியாசமாக செய்கிறார். எப்படி?

‘‘முதல்ல எங்க இடத்துலேருந்தே இட்லி செய்து, கேட்கற இடங்களுக்கு அனுப்பிட்டிருந்தேன். நடுராத்திரி 2-3 மணிக்கே மாவு ரெடி பண்ணி, இட்லி செய்யணும். அப்புறம் அதை வண்டியில ஏத்தி, சம்பந்தப்பட்ட மண்டபங்களுக்கு அனுப்புவோம். அவங்க அதை மறுபடி சூடு பண்ணி, சாப்பாட்டு நேரத்துல பரிமாறும் போது, இட்லியில சூடோ, சுவையோ இருக்காது. அப்பதான், ஸ்பாட்லயே மாவை எடுத்துட்டுப் போய், அவங்க எதிர்லயே சூடா தயாரிச்சுக் கொடுக்கிற ஐடியா வந்தது. முதல்ல ஒரு கல்யாணத்துல அதை ட்ரை பண்ணிப் பார்த்தப்ப, நல்ல வரவேற்பு. ஆனாலும், அடுத்தடுத்த ஆர்டர் பிடிக்கிறது ஆரம்ப காலத்துல பெரிய சவாலாகத்தான் இருந்தது.

ஹோட்டல், ஆஸ்பத்திரி, கல்யாண கான்டிராக்டர் ஆபீஸ்னு எல்லாரையும் நேர்ல சந்திச்சு, என்னோட கான்செப்ட் பத்திச் சொல்லுவேன். அரைகுறையா காதுல வாங்கிட்டு, சொல்லியனுப்பறோம்பாங்க. மறுபடி போன் பண்ணினா, வேற வேலையில சரியா பதில் சொல்ல மாட்டாங்க. எல்லாருக்கும் கடிதம் எழுத ஆரம்பிச்சேன். அது எனக்குத் திருப்புமுனையா அமைஞ்சது. பொறுமையா படிச்சுப் பார்த்து, புரிஞ்சுக்கிட்டு, ஆர்டர் கொடுக்கத் தொடங்கினாங்க. இன்னிக்கு நிற்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கேன்னா என்னோட இட்லி வியாபாரம்தாங்க காரணம்’’ என்கிறார்.

இட்லிக்கான மாவு இவரது முன்னிலையில், இவரது இடத்திலேயே சுத்தமாக, ஆரோக்கியமாக தயாரிக்கப்படுகிறது. பிறகு அது கல்யாண மண்டபம், விழா அரங்கு போன்ற இடங்களுக்குக் கொண்டுவரப் பட்டு, மக்கள் முன்னிலையில் சுடச்சுட ஆவி பறக்கும் இட்லியாக தயார் செய்யப்பட்டுப் பரிமாறப் படுகிறது.  இவர் தயாரிக்கிற மிருதுவான, வெள்ளை நிற இட்லியைப் பார்க்கும் யாருக்கும் அந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியாது. நமக்கும்...
‘மாவுல கெமிக்கல் ஏதாவது சேர்க்கறீங்களா?’

‘‘முதல் விஷயம்... இந்த இட்லி, சென்னைல உள்ள குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கும் போகுது. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுது. அதனால கெமிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பலரும் நினைச்சிட்டிருக்கிற மாதிரி மிருதுவான, வெள்ளையான இட்லிங்கிறது ஒண்ணும் சிதம்பர ரகசியமில்லை. சரியான அரிசி, உளுந்து, அரைக்கிற விதம், புளிக்கிற நேரம்னு பலதையும் பொறுத்தது அது. ஐ.ஆர்.20 பெருமணி அரிசியை 1 மணி நேரம் ஊற வச்சு ரொம்ப நைசா அரைக்கணும். உளுந்து ரொம்ப நேரம் ஊறக்கூடாது. இன்னும் சொல்லப் போனா, அரிசியை அரைச்சு வச்சிட்டு, அடுத்த நாள் காலைல இட்லி வேக வைக்கிறதுக்கு முன்னாடி உளுந்து அரைச்சு சேர்த்தாலே போதும். மிருதுவா வர்றதுக்கு ஆமணக்கு விதை சேர்க்கறோம். ஆமணக்கு விதைலேர்ந்துதான் விளக்கெண்ணெய் எடுக்கிறாங்கன்றது எல்லாருக்கும் தெரியும். அது உடம்பு சூட்டையும் தணிக்கும். மத்தபடி இதுல ஒரு சூட்சுமமும் இல்லை’’ என்கிறார்.

சாதாரண இட்லி தவிர, இளநீர் இட்லி, புதினா இட்லி, சாக்லெட் இட்லி, தட்டு இட்லி, வெஜிடபிள் இட்லி, பீட்சா இட்லி, டூட்டி ஃப்ரூட்டி இட்லி என ஏகப்பட்ட இட்லி வகைகளைத் தயாரிக்கிறார் இனியவன். சமீபத்தில் நடந்து முடிந்த சினேகா- பிரசன்னா வீட்டுக் கல்யாண விருந்தில் இட்லி சப்ளை செய்ததும் இவரே! பிறந்த நாளைக்கு கேக் வெட்டுகிற கலாசாரத்தை மாற்றி, இட்லி வெட்டுகிற புதுமை முயற்சியையும் ஆரம்பித்திருக்கிறார்.

அதன் தொடக்கமாக, தனது மகளின் பிறந்த நாளைக்கு இட்லி தயாரித்து, ஸ்டாலின் முன்னிலையில் வெட்டச் செய்திருக்கிறார்.‘‘பிறந்தநாள் இட்லிகளுக்கு இப்ப நல்ல வரவேற்பு இருக்குங்க... எந்த வடிவத்துல வேணாலும் செய்யலாம். பார்க்கறதுக்கு கேக் மாதிரியே இருக்கும். நம்ம பாரம்பரிய உணவுங்கிற பெருமையும் சேருது பாருங்க...’’ - தான் தயாரிக்கிற இட்லியைப் போலவே வெள்ளையாகச் சிரிக்கிறார் இனியவன்.

கீரை இட்லி செய்வது எப்படி

ஆரோக்கியமான சுவையான கீரை இட்லி செய்வது எப்படி? இதோ உங்களுக்காக பண்கொம் பாலாவின்
செய்முறை...

என்ன தேவை?

இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

எப்படி செய்வது?

மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் ஊன்றி வேக வைத்து எடுங்கள். கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம்.
இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மையாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான் இருக்கிறது.
அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப.
அரிசியையும் பருப்பையும் தனித்தனியே ஊறவைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்து பொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள்.
உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்கவிடுங்கள்.

 

டெல்லி அப்பள ஸ்டால்

இதாங்க தஞ்சை அண்ட் கோ(வடசேரி) -வின் டெல்லி அப்பள ஸ்டால்.....

அப்பளம் ஆகும் முன் அடிவாங்குகிறது தண்ணீரும் அப்பள மாவும்...

நீருடன் சேர்த்து இளகுவான அதாவது பதமான நிலையில் சுழலுகிறது.....

தட்டில் ஊற்றப்பட்ட மாவு ஒரே சுழற்றில் தட்டுமுழுவதும் பரவுகிறது....



மாவுடன்கூடிய தட்டு கடாயில் கொதிக்கும் தண்ணீரில் இட்டு வேக வைக்கப்படுகிறது..




தட்டில் வெந்த அப்பளம் தட்டிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது....
அணிவரிசையாக அடுக்கப்பட்ட அப்பளங்கள்.....


பிறகு இங்கு அவற்றை காய வைக்கப்படுகிறது....
நன்றி :http://arumaii.blogspot.com/2012/01/blog-post_22.html

நம்பிக்கைதான் மூலதனம்

தொழில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை... உழைப்புதான் தேவை. எந்த தொழிலையும் நேர்மையாகவும், முழு கவனத்துடனும் செய்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் அருள். இவர், தன் மனைவி லதாவுடன் இணைந்து கொளத்தூரில் ‘அக்ஷயா குடில்’ என்ற சிற்றுண்டி உணவகத்தை நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதி தமது தொழில் அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்...

பள்ளிப்படிப்பை முடிச்சிட்டு, சொந்தமா பிளே ஸ்கூல் அல்லது முதியோர் இல்லம் அல்லது சின்னதா ஒரு உணவகம் ஆரம்பிக்க நினைச்சேன். ஆனா குடும்பம், குழந்தைகள்... வேலைக்கு போகும் கட்டாயம் ஏற்பட்டது. கை நிறைய சம்பளம் இருந்தாலும், மனதில் தொழில் செய்யணும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்கு அடிதளம் போட்டவர் பூ விற்கும் பெண்மணி ஒருவர்.

கூடை நிறைய பூ, விற்றால் தான் அவருக்கு வருமானம். ஒரு பெண் கஷ்டப்பட்டு தொழில் செஞ்சு குடும்பத்தை காப்பாற்றும் போது, நம்மால் ஏன் முடியாது என்று தோன்றியது. அன்று முடிவு செய்தேன் சொந்தமா தொழில் செய்யணும்ன்னு. இப்ப மார்க்கெட்டில் பிரபலமான தொழில் உணவகம். அதற்கான வேலைகளில் ஈடுபட்டோம்.

வீட்டிலேயே, சின்னதா சமையல் அறை, வேலைக்கு 3 பெண்கள்... தொழில் தொடங்க ஆயத்தமான பிறகு, முதல் நாள் 20 சாப்பாடு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பெரிய நம்பிக்கையோடு அம்பத்தூர் பஸ் நிலையத்தில் ஒரு ஸ்டூலில் வைத்து விற்பனை செய்தேன். ஒரே ஒரு பாக்கெட் தான் விற்பனையாச்சு. அன்று பெரிய ஏமாற்றம் என்றாலும், அதையே சவாலாக மாற்றி, கொளத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ வாசலில் விற்றேன். அங்கு ஓரளவுக்கு நல்ல போனது.

ஆனா தினமும் சாப்பாட்டு மூட்டையை தூக்கிக் கொண்டு தெருவில் நிற்க முடியாது. அதனால் சூப்பர் மார்க்கெட் வாசலில் சின்னதா ஒரு ஸ்டால் போட திட்டமிட்டோம். அண்ணாநகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அதற்கு அனுமதியும் கொடுத்தது. பர்கர், பானி பூரின்னு இல்லாமல் வித்தியாசமா இருக்க குழிப்பணியாரம், பால் கொழுக்கட்டை, சிக்கன் வடை, சிக்கன் மொகாலி, பூர்ண கொழுக்கட்டை, சிக்கன் பகோடா, அடை சட்னி, இடியாப்பம், புட்டு சென்னா... செட்டிநாடு உணவுகளை விற்க ஆரம்பிச்சோம்.

நன்றாக போனதால், கொளத்தூரில் உள்ள அவர்களின் மற்றொரு கிளையிலும் ஸ்டால் போட அனுமதி கிடைத்தது. ஆரம்பத்தில் பல நாட்கள் உணவுகள் வீணாகி உள்ளது. அளவு தெரியாமல் அதிகமா போட்டு வீணாகியிருக்கு. அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் இங்குள்ள மக்கள் வெளி உணவுகள் சாப்பிட மாட்டாங்க. ஆனா அண்ணாநகர் வாசிகளுக்கு அந்த விதிவிலக்கு கிடையாது. இது தெரிந்துக் கொள்ளவே எங்களுக்கு நான்கு மாதம் ஆனது. அதன் பிறகு அதற்கு ஏற்ப பொருளை தயாரிக்கிறோம்

தற்போது, சிற்றுண்டி உணவுகள் மட்டும் இல்லாமல், வெரைட்டி ரைஸ், பிரியாணி போன்றவை ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம். டிபன் அயிட்டம் மற்றும் இல்லாமல் இது போன்ற உணவுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பிரியாணி. அதே போல் சீமந்த விழாவிற்கும் ஆர்டர் பேரில் சமைச்சு கொடுக்கிறோம். அலுவலகம் செல்பவர்கள் கூட உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். அவர்களுக்கு தனியாக பேக் செய்து ஸ்டாலில் வைத்துவிடுகிறோம்.இவ்வாறு சொல்கிறார்கள்.

சிப்ஸ் தயாரிப்பில் சிறப்பான வாழ்க்கை

சிம்பிளான உணவுதான்! ஆனாலும், சாதாரண ரசம் சாதத்தையும் அறுசுவையாக்குவதில் இருந்து, அறுசுவை விருந்தில் தவிர்க்க முடியாத இடம் பெறுவது வரை சிப்ஸின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். சாப்பிடவே அடம் பிடிக்கிற பிள்ளைகளுக்கும், சிப்ஸ் இருந்தால், இரண்டு வாய் அதிகமாகவே இறங்குவதை மறுப்பதற்கில்லை. இப்படி எல்லா வயதினருக்கும் எல்லாக் காலத்திலும் பிடித்த உணவாக இருக்கும் சிப்ஸை கடைகளில் வாங்குவது எந்தளவு ஆரோக்கியமானது? திரும்பத் திரும்ப உபயோகிக்கிற எண்ணெய், கிழங்கின் தரம், செய்கிற சூழல் என எல்லாவற்றிலும் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் இல்லை. ‘வீட்லயே செய்யலாம்தான்... ஆனா கடைகள்ல வாங்கற மாதிரி டேஸ்ட்டும் கலரும் கிடைக்கிறதில்லையே...’ என்பது அம்மாக்கள் சொல்லும் நியாயமான காரணம். ‘‘நான் சொல்ற மாதிரி செய்து பாருங்க. அப்புறம் கடையில விக்கிற சிப்ஸ் வேணாம்னு சொல்ற அளவுக்கு நீங்க சிப்ஸ் எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த காவேரி!

‘‘முயற்சி செய்து பார்க்கிற வரைக்கும், எனக்கும் சிப்ஸ் செய்யறதுங்கிறது கம்ப சூத்திரம் மாதிரிதான் இருந்தது. யதேச்சையா ஒருநாள் வீட்டுல உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து பார்த்தேன். நல்லா வந்தது. அப்புறம் மறுபடி செய்து, அக்கம்பக்கத்துல சாம்பிள் கொடுத்தேன். கடையில வாங்கும் சிப்ஸைவிட நல்லா இருக்கிறதா சொல்லி, ஆர்டர் கொடுத்தாங்க. நான் மகளிர் சுயஉதவிக் குழுவுல இருக்கிறதால, குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆர்டர் கொடுப்பாங்க. அது தவிர, அக்கம் பக்கத்து வீடுகள், சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு எல்லோரும் எப்பவும் என்கிட்ட மட்டும்தான் சிப்ஸ் வாங்குவாங்க. சுத்தமான எண்ணெய், நல்ல கிழங்கு இந்த ரெண்டுதான் தரம் மற்றும் சுவையோட ரகசியம்’’ என்கிற காவேரி, உருளைக்கிழங்கு தவிர, மரவள்ளிக்கிழங்கு, நேந்திரங்காய், வாழைக்காய் சிப்ஸ் செய்வதிலும் நிபுணி! சிப்ஸ் பிசினஸால் வாழ்க்கை சிறப்படைந்ததில் இவருக்கு அளவில்லாத பெருமை! (தொடர்புக்கு: 97907 50573)

இது இப்படித்தான்!

மூலப் பொருள்கள்
உருளைக்கிழங்கு, வாழைக்காய், நேந்திரங்காய், மரவள்ளிக்கிழங்கு, எண்ணெய், மிளகாய் தூள், உப்பு, தண்ணீர், சிப்ஸ் சீவும் கட்டை, பெரிய கடாய், அடுப்பு, பேக்கிங் செய்ய கவர்கள், சீலிங் மெஷின் மற்றும் எடை மெஷின்.

எங்கே வாங்கலாம்?
உருளைக்கிழங்கைப் பொறுத்த வரை சாதாரண கிழங்கில் சிப்ஸ் சரியாக வராது. சிப்ஸ் கிழங்கு என்று கேட்டு வாங்க வேண்டும். வெள்ளை வெளேர் என அழுத்தமாக இருக்கும். எல்லா கடைகளிலும் அது கிடைக்காது. கோயம்பேடு மாதிரியான மொத்த விலை விற்பனை நிலையங்களில் தேர்வு செய்து வாங்கலாம். நேந்திரங்காய், வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு வகையறாக்களையும் ஃபிரெஷ்ஷாக தேர்வு செய்ய வேண்டும்.  கடாய், சிப்ஸ் கட்டை, சீலிங் மற்றும் எடை மெஷின்களை பாத்திரக்கடைகளில் வாங்கலாம்.

முதலீடு

கிழங்கு, காய், எண்ணெய் உள்ளிட்ட மளிகை சாமான்கள் வாங்க ஆயிரம் ரூபாய் தேவை. கடாய், சிப்ஸ் கட்டை மற்றும் கவர்களுக்கு 350 ரூபாய். எடை மெஷின் 500 ரூபாயிலிருந்து கிடைக்கும். சீலிங் மெஷினுக்கு 750 ரூபாய். 

இட வசதி?

வெளிச்சமான, சுத்தமான இடம் தேவை. சில வகை சிப்ஸ்களை சீவி காய வைக்க வேண்டியிருக்கும். அந்த இடம் ஈரப்பதம் இல்லாமல், அதே நேரம் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையில் அடுப்படியிலேயே வைத்து சமாளிக்கலாம்.

மாத வருமானம்?
1 கிலோ கிழங்கில் 350 முதல் 400 கிராம் சிப்ஸ் வரும். அதில் வேஸ்ட்டேஜை தவிர்க்க முடியாது. 1 நாளைக்கு 10 கிலோ வரை செய்யலாம். ஒரு பாக்கெட் (100 கிராம்) 25 ரூபாய்க்கு கொடுக்கலாம். அதில் 5 ரூபாய் லாபம் நிற்கும்.

மார்க்கெட்டிங்?

உங்களுடைய முதல் இலக்கு அக்கம்பக்கத்து வீடுகள், பள்ளிக்கூடங்கள் என உங்களுக்குத் தெரிந்த, அறிமுகமான, உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள நபர்களாக இருக்கட்டும். பிறகு கேட்டரிங் கான்டிராக்டர்களை பிடித்து, சிப்ஸுக்கு மட்டும் ஆர்டர் எடுக்கலாம். மெல்ல மெல்ல கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். இந்த பிசினஸில் நிறைய நேரம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. ஆர்டர் வர வர, அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக செய்து கொடுக்கலாம்.

கொட்டாங்குச்சி தொழில்

பிள்ளையார், மனித உருவங்கள், கோமாளி, பேனா ஸ்டாண்டு, பூக்கூடை... இன்னும் இப்படி எத்தனையோ இருக்கின்றன அங்கு! அத்தனை பொருட்களும் கொட்டாங்குச்சியில் செய்யப்பட்டவை என்றால் நம்ப முடியவில்லை. சென்னையிலுள்ள பள்ளி ஒன்றில் கைவினைக் கலை ஆசிரியராக வேலை பார்க்கிற லட்சுமியின் கைவண்ணத்தில் சாதாரண கொட்டாங்குச்சி கூட கலைப் பொருளாகிறது.

‘‘32 வருஷங்களா கைவினைப் பொருட்கள் பண்ணிட்டிருக்கேன். புதுசா எதையாவது வாங்கி, ஒரு கலைப் பொருளை உருவாக்கிறதைவிட... தேவையில்லைன்னு ஒதுக்கித் தள்ற பல பொருட்களை, அழகான கலைப் பொருளாக்கிக் காட்டறதுல எனக்கு ஆர்வம் அதிகம். அதுல ஒண்ணுதான் இந்தக் கொட்டாங்குச்சி டிசைன்கள்’’ என்கிற லட்சுமி, கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘உபயோகமில்லாத கொட்டாங்குச்சி, ஃபேப்ரிக் கலர், எம் சீல், வார்னிஷ், அலங்காரப் பொருட்கள்... வெறும் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைதான் முதலீடு.’’

என்னென்ன உருவங்கள்? என்ன ஸ்பெஷல்?
‘‘சாமி உருவங்கள், கார்ட்டூன், பூத்தொட்டி, பேனா ஸ்டாண்டு, விலங்குகள், பேப்பர் வெயிட், செல்போன் ஸ்டாண்டு என கற்பனைக்கேற்றபடி எதையும் உருவாக்கலாம். எம் சீல் உபயோகித்துச் செய்வதால், எத்தனை வருடங்களானாலும் உடையாது. எடை குறைவான அலங்காரப் பொருள். சின்னச் சின்ன விசேஷங்களுக்கு அன்பளிப்புகள் கொடுக்க ஏற்றது. ஆணி அடிக்காமல், அப்படியே வீட்டில் அலங்காரமாக வைக்கலாம்.

தேங்காய் வேறு வேறு அளவுகளில் கிடைப்பதால், நமக்குத் தேவையான அளவு கொட்டாங்குச்சியைத் தேர்ந்தெடுக்கலாம். தேங்காயை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு உடைத் தால், சரி பாதியாக உடையும். பிறகு அதை மிருதுவாக்கி, டிசைன் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 6 உருவங்கள் வரை செய்யலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கைவினைப் பொருள்கள் விற்பனையாகிற கடைகளில் கொடுக்கலாம். பிறந்த நாள் மாதிரியான விசேஷங்களில் ஒரே மாதிரியான ரிட்டர்ன் கிஃப்ட் கேட்பவர்களுக்கு மொத்தமாக ஆர்டர் எடுத்துச் செய்து தரலாம்.

ஒன்று செய்ய 2 மணி நேரமாகும். ஒரு டிசைனை 200 முதல் 250 ரூபாய் வரை விற்கலாம். 100 சதவீதம் லாபம்
நிச்சயம்.’’

Saturday, September 22, 2012

விடிவெள்ளி’


தேவைகள்தான் நம்மை வெளிச்சத்தை நோக்கி நகர வைக்குது. ரெண்டு குழந்தைகளோட அநாதரவா நின்ன நிலைதான், என்னையும் சுயமுன்னேற்றத்தை நோக்கி ஓடவெச்சுது. உழைப்பும், உறுதியும் கைகொடுக்க, ‘வெற்றிகரமான சுயதொழில் முனைவோர்’ங்கற பெருமையோட இப்ப நான் நிமிர்ந்து நிக்கறேன்!” – நிதானமான வார்த்தைகளில் ஆரம்பித்தார், சென்னை, கிண்டியைச் சேர்ந்த ஸ்டெல்லா. இன்று ‘பேப்பர் ஃபைல்’ பிஸினஸில் மாதம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கும் ஸ்டெல்லாவின் நேற்றைய பக்கங்கள், துயரமும் தோல்வியும் நிரந்தரமல்ல என்கிற பாடம் சொல்பவை.
சென்னை, ராயபுரம், காசிமேடு பகுதியில் ‘விடிவெள்ளி’ என்று போர்டு மாட்டிய தன் கடையில், வேலைகளுக்கு இடையே நம்மிடம் பேசினார் ஸ்டெல்லா.”தஞ்சாவூர்தான் நான் பிறந்த மண். அப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர்ஸ். நல்லா படிப்பேன். ஓவியம், டைப்ரைட்டிங்னு எப்பவும் எதையாச்சும் கத்துக்கிட்டு துறுதுறுனு இருப்பேன். கால ஓட்டத்துல சென்னையில செட்டில் ஆக, கிண்டியில இருக்கற செல்லம்மாள் மகளிர் கல்லூரியில பி.காம். முடிச்சேன்.
வீட்டுல சும்மா இருக்க பிடிக்காம, தினமும் ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் எடுத்தேன். அந்த வருமானத்துலயே கல்யாணத்துக்கு 15 பவுன் சேர்த்தேன். ‘கெட்டிக்காரப் பொண்ணு… நல்லவிதமா பிழைச்சுக்குவா’னு எல்லாரும் ஆச்சர்யமா பேசினாங்க. ஆனா, விதி என்னை வாழ்க்கையோட போராட வைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை” எனும்போது, குரல் மாறுகிறது ஸ்டெல்லாவுக்கு.
”திருமணம் முடிஞ்சு… ஒரு ஆண், ஒரு பொண்ணுனு ரெண்டு குழந்தைங்க பிறந்தாங்க. இந்த நிலையில மனஸ்தாபத்தால நானும் கணவரும் பிரிஞ்சுட்டோம். பையனையும், பொண்ணையும் படிக்க வெச்சு ஆளாக்க வேண்டிய பொறுப்பு என் முதுகில். வருமானத் துக்கு வழி தேடி அலைஞ்சேன். கிண்டியில இருக்கற சுயதொழில் வேலைவாய்ப்பு நிலையத்துல மூணு மாசம் தையல் பயிற்சி முடிச்ச கையோட, அங்க… இங்கனு தேடி அலைஞ்சு ஆண்களுக்காக ஷர்ட்ஸ் தைச்சு கொடுக்குற ஆர்டரைப் பிடிச்சேன். நகை எல்லாத்தையும் அடகு வெச்சு, அஞ்சு தையல் மெஷின்களை வாங்கிப் போட்டேன். அஞ்சு ஆட்களையும் வேலைக்குச் சேர்த்தேன். முதலாளியா நிக்காம, நானும்கூட சேர்ந்து தைச்சேன்.

நல்லா போயிட்டு இருந்த பிஸினஸ், திடீரென வேலை ஆட்கள் வராம போக சறுக்கிடுச்சு. எங்கிட்ட வேலை பார்த்தவங்க எல்லாரும் ஒரேசமயத்துல விலகி, நான் ஆர்டர் வாங்கின நிறுவனங்கள்லயே வேலைக்குச் சேர்ந்துட்டாங்க. அது தீபாவளி நேரம் வேற. நிலைமையைச் சமாளிக்க முடியாம, அத்தனை மெஷின்களையும் வித்துட்டேன். ஆனாலும் அந்தத் தோல்வியில சில பாடங்கள் கத்துக்கிட்டேன். சோர்ந்து உட்காராம, ‘அடுத்து என்ன?’னு யோசிச்சேன். மறுபடியும் சுயதொழில் வேலை வாய்ப்பு நிலையத்தை அணுகினேன். ஃபைல்கள் செய்ற தொழில் தொடங்குற ஐடியா கொடுத்தவங்க, தொழில்ல முன் அனுபவம் இருந்ததால் மூணு லட்ச ரூபாய் லோனும் கொடுத்தாங்க. தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்கள் வாங்கினேன். ஒரு கடையையும் வாடகைக்குப் பிடிச்சேன்” என்றவர்,
”ஆரம்பத்தில் பிளாஸ்டிக் ஃபைல்களையும், பர்ஸ்களையும்தான் செய்துட்டு இருந்தேன். அப்புறம்தான் பழவேற்காட்டில் இருக்கற மகளிர் சுய உதவிக்குழுக்கள், வேஸ்ட் பொருட்களை மறுசுழற்சி செய்து… பேப்பர் அட்டைகள் செய்றதைக் கேள்விப்பட்டு, அவங்ககிட்ட ஹோல்சேல் ரேட்ல அட்டைகளை வாங்கினேன். அதுல என்னென்ன பொருட்கள் எல்லாம் செய்யலாம்னு மூளைக்கு வேலை கொடுத்தேன். நோட் பேட், ஃபைல், டைரி, டேபிள் மேட், பென் ஸ்டாண்ட்னு பல பொருட்களைத் தயாரிச்சேன். சென்னை, தீவுத் திடல் கண்காட்சியில முதல் முறையா ஸ்டால் போட்டேன். அத்தனை பொருட்களும் விற்றுத் தீர்ந்ததோட, ஆர்டர்களும் குவிஞ்சுது. என் ஒற்றை ஆளோட உழைப்பு பத்தாதுங்குற அளவுக்கு விற்பனை விரிய, ஆறு பெண்களை வேலைக்குச் சேர்த்து தொழிலை விரிவுபடுத்தினேன்.
சென்னையில டபுள்யூ.சி.சி, எம்.ஓ.பி-னு மகளிர் கல்லூரி விழாக்கள்ல ஸ்டால் போட்டேன். என் பொருட்கள் அவங்களுக்குத் தரமா, திருப்தியா இருந்ததால தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கறாங்க. இந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஹேண்ட் பேக், செல்போன் பவுச், கிஃப்ட் அயிட்டம்னு என்ன மாதிரி பொருட்களை இளம்பெண்கள் விரும்பறாங்கனு அவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தே தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்தமாதிரியான பொருட்களைக் கொண்டுபோக ஆரம்பிச்சுட்டேன். பெரிய நிறுவனங்கள்ல வேலை பார்க்கிற ஹெச்.ஆர் அதிகாரிகள் கிட்டயும் போய் ஆர்டர்கள் வாங்கறேன்… சில்லறை விற்பனைனு நாலா பக்கமும் ஓடுறேன்.

இப்படி ஒவ்வொரு அடியையும் நிதானமா வைக்கறதால, தோல்விகளுக்கு இடமில்லாம பார்த்துக்குறேன். நாளண்ணுக்கு ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் ஆர்டர் எடுக்கிறேன். மூணு பேர் வேலை பார்க்கறாங்க. மாசம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. என் பிள்ளைங்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை கொடுக்க முடியும்ங்கிற நம்பிக்கை இப்போ எனக்கு 200 சதவிகிதம் வந்திருக்கு”
- கையிலிருந்த பேப்பர் ஃபைல் வேலையை முடித்துவிட்டு நிமிரும்போது, நிறைவு ஸ்டெல்லா முகத்தில்.
”இந்தத் தொழிலுக்கு எதிர்கால உத்தரவாதம் இருக்கு. ஏதாச்சும் பிடி கிடைக்காதானு என்னைப் போல வாடற பெண்கள், இதை தைரியமா எடுத்துச் செய்யலாம். கொஞ்சம் பணத்தோட பயிற்சியும் முயற்சியும்தான் முக்கிய மூலதனம்!”

புதிய தொழில் முனைவோருக்கு 'டிக்' முன்னுரிமை


தமிழகத் தொழில் முதலீட்டு கழகம் (டிக்), வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.நிலம், கட்டடம், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு, நீண்ட கால தவணையில் கடன் வழங்கி வரும், தமிழக அரசின், 'டிக்' மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. அரிசி மற்றும் மாவு ஆலைகள், எண்ணெய் உற்பத்தி, கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் போன்ற 25க்கும் மேற்பட்ட வேளாண் பொருள் மதிப்புக்கூட்டு தொழில் துவங்குவோருக்கு, கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மாறுபடும் வட்டி விகிதம்: ஒரு தொழில் நிறுவனத்திற்கு, குறைந்தபட்சம் 14.75 சதவீதம், அதிகபட்சம் 16.25 சதவீதம் வட்டியில், இரண்டு லட்சம் ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் கடன்களுக்கு, மாறுபடும் வட்டி விகித முறை பின்பற்றப்படுகிறது.'டிக்' மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மொத்த கடனில், 12 சதவீதம் வேளாண் மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கு அளிக்கப்படுகிறது. மானிய உதவி:தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களிலும், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்களைத் துவங்குவோர்களுக்கு, இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு அதன் மொத்த முதலீட்டில், குறைந்தபட்சம் 15 சதவீதம், அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.இவை தவிர, மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை சார்பில், இயந்திரம் வாங்குவதற்கும், உற்பத்திக் கூடம் கட்டுவதற்கும் (சாலை, குடிநீர் தொட்டி, சுற்றுச் சுவர் தவிர) மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் மொத்தச் செலவில், குறைந்தபட்சம் 25 சதவீதம் என்ற அளவில் அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரை மானியம் அளிக்கப்படுகிறது.மத்திய அரசு, 'கிரெடிட் லிங்க்ட் கேபிடல் சப்சிடி ஸ்கீம்' என்ற திட்டத்தின் கீழ், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற குறிப்பிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 15 சதவீதம் என்ற அளவில், அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.மேற்கண்ட மானியங்கள் அனைத்தும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்த மானியங்களை மத்திய, மாநில அரசுகளிடமிருந்து, பெற்றுத் தரும் முகமை அமைப்பாகவும், 'டிக்' செயல்படுகிறது. இது தவிர, மூலப்பொருட்கள், ஊதியம் உள்ளிட்ட செலவினங்களைச் சமாளித்து, தொய்வின்றி தொழிலைத் தொடர உதவும் வகையில், தொழில் முனைவோருக்கு நடைமுறை மூலதனமும் வழங்கப்படுகிறது. மாநிலத்தின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உணவு பதப்படுத்துதல் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், 100 கோடி ரூபாய் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளது.சுய தொழில்:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆண்டுதோறும், பொறியியல் மற்றும் தொழில்கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு, வேலைக்காக பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.அப்படி வருபவர்கள், 'டிக்' அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், தாங்கள் சார்ந்த மாவட்டத்திலேயே, மேற்கண்ட தொழில்களைத் துவங்க, கடன் வழங்கப்படும். புதிய தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம், படித்த இளைஞர்கள் சுயதொழில் செய்து, சொந்தக் காலில் நிற்க வழி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.- வீ.அரிகரசுதன் -

Sunday, September 16, 2012

கைத்தறி

ம் நாட்டின் பாரம்பரியத் தொழில்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாகக் கருதப்படுவது கைத்தறி நெசவுத் தொழில். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் குடும்பங்கள் கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வின் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. விவசாயத்தைத் தொடர்ந்து தற்போது கைத்தறி நெசவுத் தொழிலும் அழியும் நிலையில் இருப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்கள் நெசவாளர்கள். ஏன் இந்த நிலமை?
எந்தத் தொழிலாக இருந்தாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைத்தாலே தொழிலாளர்களின் மனமும் வயிறும் நிரம்பிவிடும். எல்லா சிறு தொழில்களிலும் இருப்பதைப் போலவே கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியைக் கைத்தறி முதலாளிகளே நிர்ணயிப்பதுதான் பிரச்னையின் அடிநாதம். இந்தப் பிரச்னைகுறித்து கைத்தறி நெசவாளியான சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த ரத்னவேலிடம் பேசினோம்.
''நான் 20 வருஷங்களாகக் கைத்தறி நெசவாளியாக இருக்கேன். இதுவரைக்கும் எங்களுக்கான கூலியை, எங்களோட முதலாளிங்கதான் நிர்ணயம் பண்றாங்க. தோராயமா ஒரு சேலைக்கு அதன் ரகத்தைப் பொறுத்து 500 முதல் 2,000 ரூபாய் வரைக்கும் முதலாளிகள் லாபம் பார்க்கிறாங்க. ஆனால், சேலையின் விற்பனை விலையில பத்து சதவிகிதம்கூட எங்களுக்கான கூலியாக முதலாளிகள் தர்றது இல்லை. காரணம் கேட்டால், தொழில் நஷ்டத்துல ஓடுதுனு சொல்றாங்க. நஷ்டத்துல ஓடுற தொழிலைப் பல வருஷங்களாக ஏன் அவங்க செய்றாங்க? தீபாவளிக்கு மட்டும் எங்களுக்கு போனஸ் கொடுப்பாங்க. அதுவும் மூன்று முதல் ஐந்து சதவிகிதம் வரை மட்டுமே. 17 வருஷங்களுக்கு முன்னாடி போட்ட ஒப்பந்தப்படிதான் இப்பவும் கூலி கிடைக்குது. அன்னைக்கு விலைவாசிக்கும் இன்னைக்கு விலைவாசிக்கும் வித்தியாசம் என்னனு முதலாளிகளுக்குத் தெரியாதா?'' என்று கேட்கிறார் வருத்தத்துடன்.
வேறு எந்தத் தொழிலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தொழிலில் முதலாளிகளின் ஆதிக்கம் அதிகம். நெசவாளிகளின் கூலியைச் சுரண்டுதல், நஷ்டத்தைத் தொழிலாளிகளின் தலையில் சுமத்துபவர்கள், லாபத்தை மட்டும் தங்கள் கைகளிலேயே வைத்துக்கொள்கிறார்கள்.  இவை எல்லாம் முதலாளிகள் மீது நெசவாளித் தொழிலாளர்கள் கூறும் குற்றச்சாட்டுகள்.
நம்மிடம் பேசிய இன்னொரு நெசவாளி, ''இவங்க அடிக்கிற இன்னொரு கொள்ளை, பட்டு நூல் பதுக்கல்.  பட்டு உற்பத்தி எப்போது எல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போது முதலாளிகள் பட்டு நூலைச் சந்தைகளில் மொத்தமாக வாங்கி, பதுக்கி வைத்துக்கொள்கின்றனர். பிறகு, எப்போது பட்டு நூலுக்குத் தட்டுப்பாடு அதிகரிக்கிறதோ அந்தச் சமயத்தில் கள்ள மார்க்கெட்டில் அநியாய விலைக்கு விற்கிறார்கள். இதற்குச்  சில ஜவுளிக் கடைக்காரர்களும்  உடந்தையாக இருப்பதுதான் கொடுமை'' என்றார்.
விசைத்தறி வில்லன்
கைத்தறி நெசவின் நேரடி வில்லன் விசைத்தறி. ஜெட் லூம்ஸ் மற்றும் ஏர் லூம்ஸ் என இந்த விசைத் தறிகளில் பல வகைகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் லுங்கிகள் மற்றும் துண்டுகளை உற்பத்தி செய்ய மட்டுமே விசைத்தறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக நடக்கிறது. ஆட்கள் எண்ணிக்கையும் பொருள் செலவும் கைத்தறியைவிட விசைத்தறிகளில் குறைவு என்பதால், விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளை உருவாக்குவதையே முதலாளிகள் விரும்புகின்றனர். ஆனால், விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளைத் தயாரிக்கக் கூடாது என்பது அரசின் விதிமுறை. 
''அரசு விதிமுறையை மீறி விசைத்தறிகளில் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்தால் அந்தத் தறிகளுக்கு ரெய்டு நடத்தி சீல் வைப்பதாக அவ்வப்போது அரசு அதிகாரிகள் அறிக்கை விடுவார்கள். ரெய்டும் நடத்துவார்கள். ஆனால், யார் மீதும் பெரிதாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இதுவரை இந்த விஷயத்தில் இவர்கள் நடவடிக்கை எடுத்த முதலாளிகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிகாரிகள் ரெய்டுக்கு வரும்போதும், மாத மாமூல், வார மாமூல், தீபாவளி, பொங்கல் போனஸ் என்று வகையாகக் கவனிக்கிறார்கள் விசைத்தறி முதலாளிகள். சேலம் மாவட்டத்தின் பல ஊர்களிலும் பட்டுச் சேலைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ஏராளமான விசைத்தறிகள் இயங்கி வருவதே இதற்குச் சான்று. ஒரு கைத்தறி நெசவாளி ஐந்து நாட்களில் நெய்ய வேண்டிய சேலையை விசைத்தறியில் ஒரே நாளில் நெய்திடலாம்'' என்கிறார் சேலத்தைச் சேர்ந்த கைத்தறியாளர் சண்முகம்.
சரிவரச் சென்று அடையாத சலுகைகள்
* எதிர்பாராத விபத்தின் காரணமாகத் தொழிலாளி இறந்துபோனால் தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு.
* மரணம் இயற்கையாக நிகழ்ந்தால் தொழிலாளியின் குடும்பத்துக்கு  15,000 ரூபாய்.
* தொழிலாளிகளின் பிள்ளைகள் படிப்புச்செலவுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை.
* பிரசவத்துக்கு 6,000 ரூபாய்.
* இவற்றைத் தவிர மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்ஷுரன்ஸ் திட்டம் போன்ற சலுகைகளும் உண்டு.
ஆனால், நகரப் பகுதிகளைச் சுற்றியுள்ள நெசவாளர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் ஓரளவேனும் சென்று அடைகின்றன. கிராமங்களைச் சேர்ந்த நெசவாளிகள் இந்தச் சலுகைகளைப் பற்றி எதுவும்  அறியாமலே இருக்கின்றார்கள். கைத்தறித் தொழிலாளிகள் சொந்தமாகக் கைத்தறி அமைக்க நினைத்தாலும் அதற்கென சரியான கடன் வசதிகளை எந்த அரசும் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. ''சலுகைகள் ஏன் எல்லா நெசவாளிகளையும் சென்று அடையவில்லை?'' என்று அதிகாரிகளிடம் கேட்டால், ''எங்கள் துறையில் ஆள் பற்றாக்குறை'' என்று  மெத்தனமாகப் பதில் சொல்கிறது தொழிலாளர் நல வாரியம்.
இந்தப் போக்கால், பல கைத்தறித் தொழிலாளிகள் கந்துவட்டிக் கொடுமையில் வீழ்ந்து கிடப்பதே மிச்சம். அடையாள அட்டைகள் இல்லாத நெசவாளர்களும் அதிகம். அரசின் சலுகைகள் குறித்த சரியான தகவல்களை ஊராட்சிகளும்  செய்தித் துறையும் தொழிலாளர்களிடம் ஒழுங்காகக்கொண்டு சேர்த்து இருந்தால், குறைந்தபட்சம் கந்து வட்டிக் கொடுமையில் இருந்தாவது நெசவாளர்கள் தப்பித்து இருப்பார்கள்.
ஜவுளிக் கடைகளின் தில்லுமுல்லு
விசைத்தறி என்பது பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களை மறைமுகமாகவும் பட்டுச் சேலைகள் வாங்கும் மக்களை நேரடியாகவும் பாதிக்கும் விஷயம். தோராயமாகக் கைத்தறியில் நெய்யப்பட்ட சுத்தப் பட்டுச் சேலை எட்டு ஆண்டுகள் வரைக்கும் வீணாகாது   என்றால் விசைத்தறியில் நெய்த பட்டுச் சேலை நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே தாங்கும். இந்த விஷயத்தை மறைப்பதில் இருந்தே, ஜவுளிக்கடைகளின் தில்லுமுல்லு ஆரம்பம் ஆகிறது.
    இதுகுறித்துப் பேசிய கைத்தறி நெசவாளர் ஒருவர், '' பெரும்பாலும் விசைத்தறியில் நெய்த பட்டுச் சேலைகளைத்தான் ஜவுளிக்கடை முதலாளிகள் வாங்குகின்றனர். காரணம், கைத்தறிப் பட்டுச் சேலைகளை விட விசைத்தறி சேலைகளின் விலை மிகவும் குறைவு. குறைவான விலைக்கு விசைத்தறி சேலைகளை வாங்கி, கைத்தறி சேலை என்று ஏமாற்றி மக்களிடம் அதிக விலைக்குப் பட்டுச் சேலைகளை விற்றுவிடும் ஜவுளிக் கடைகளே இன்று அதிகம்.  மார்க்கெட்டில் ஜவுளிக் கடைக்காரர்கள் பட்டுச் சேலைகளை வாங்கும் விலைக்கும் மக்களிடம் விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசம் பத்து மடங்குக்கும் அதிகம். விசைத்தறிச் சேலைக்கும் கைத்தறிச் சேலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம். இதைக் கடைக்காரர்கள் தங்கள் லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மாதாமாதம் ஜவுளிக்கடைகளில் சேலையின்தரம்பற்றி காதி கிராஃப்ட் அதிகாரிகள் நடத்தும் பரிசோதனையை அரசு  தீவிரமாக்கினால் மட்டுமே இதனைத்  தடுக்க முடியும்'' என்று எச்சரிக்கிறார் அவர்.
என்னதான் தீர்வு?
மாநில கைத்தறிச் சங்கச் செயலாளர்களில் ஒருவரான ஆறுமுகத்திடம் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்துக் கேட்டேன். '' சேலைகளின் ரகத்துக்கு ஏற்ப எங்களுக்கான கூலியை அரசே நிர்ணயிக்க வேண்டும். அல்லது கூலி உயர்வினைக் கொண்டுவர வேண்டும். அரசு கட்டுப்பாட்டை மீறி விசைத்தறிகளில் பட்டுச்சேலைகளை நெய்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா கைத்தறி நெசவாளர்களும் பயன்பெறும் வகையிலான  சலுகைகள் அமைய அரசு வழி செய்ய வேண்டும். இதுவே எங்களுக்குப் போதும்.
வள்ளுவர் காலத்தில் இருந்து  நம்முடைய பாரம்பரியத் தொழில் கைத்தறி. ஏற்றுமதியிலும் அரசுக்கு அதிகமான வருவாய் கொடுக்கும் தொழில் இது. இப்போது அழிந்துகொண்டு இருப்பது எங்கள் தொழில் மட்டும் அல்ல... நம்முடைய பாரம்பரியமும்கூட. இதை அரசு உணர வேண்டும்'' என்றார் தீர்க்கமாக.
கைத்தறிக்குக் கை கொடுக்கு்மா அரசு?!

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்


இது கதையா, இல்லை உண்மையா?








கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்கு தே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதி யாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை அதனால் வலி இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்த வுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக் குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்… அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.

நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.
இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சி யிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …வானமே எல்லை....

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்.. வாழ்வில் வெற்றி பெற நமக்கு அமைத்துக் கொண்ட வேலிகளைத்தாண்டி முயற்சிகள் செய்வோம்.. வாழ்வில் வெற்றி பெறுவோம்.

Thursday, September 13, 2012

வாழ்த்து அட்டைகள்

'கையிலே கலைவண்ணம் கண்டார்!’ என்று பாட்டுப் பாடவைக்கிறார் ஜோதி. பேனா ஸ்டாண்ட், வாழ்த்து அட்டைகள், போட்டோ ஃபிரேம்கள், கோப்புகள், பரிசுப் பெட்டிகள் என்று அழகழகாய் கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யும் 'லட்சுமி கிராஃப்ட்ஸ்’ நிறுவன உரிமையாளர் ஜோதி.
''கைவினைப் பொருள்கள் மீது சிறு வயதிலேயே இருந்துவந்த ஈடுபாடுதான், இப்போது ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் அளவுக்கு என்னை உயர்த்தி இருக்கு. வாழ்த்து அட்டைகள்தான் எங்கள் கைவினைப் பொருள்களிலேயே ரொம்பவும் ஸ்பெஷல். காரணம், அட்டையில் பயன்படுத்தப்படும் இயற்கையான மலர்களும், இலைகளும்! இதற்கு என்றே அலுவலக மாடியில் மலர்ச் செடிகளை வளர்த்துவருகிறோம்.

நான் பிறந்தது நாசிக். ஆனா படிச்சது, வளர்ந்தது எல்லாமே புதுச்சேரிதான். நாசிக்கில் கைவினைப் பொருள்கள் செய்யும் கலைஞர்கள் அதிகம். அப்படி ஒரு சூழலில் வளர்ந்ததால், சிறு வயதிலேயே எனக்குக் கலைப் பொருள்கள் மீது ஆர்வம் அதிகம்.
கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு ஆரோவில்லில் 10 வருடங்கள் கணித ஆசிரியராகவும் மாணவர்களுக்குக் கைவினை கலைப் பொருள்களைப் பற்றி கற்பிக்கும் ஆசிரியையாகவும் இருந்தேன். பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே நானும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நண்பர்களுக்கு என் கைகளாலேயே செய்த கலைப் பொருள்களைப் பரிசளிப்பது வழக்கம். அதற்குக் குவிந்த பாராட்டுக்கள், மேலும் கலைப் பொருள்கள் மீதான ஈர்ப்பை அதிகரித்தது.
கையில் இருந்த சிறு தொகையை முதலீடு செய்து, 2005-ல் ஆரம்பித்ததுதான் இந்த 'லட்சுமி கிராஃப்ட்ஸ்’. 'இதுதான் பட்ஜெட், இந்த கலர் பேப்பர், இதுதான் டிசைன், எதை எல்லாம் வைத்து அழகுபடுத்தலாம்’னு வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப ஒவ்வொரு பொருளையும் தயாரித்துக் கொடுப்போம்.
'அவங்க சொன்ன நேரத்துக்குள்ள பொருளைத் தயாரிக்க முடியுமா’னு ஊழியர்களோடு கலந்து ஆலோசித்த பிறகுதான் ஒவ்வொரு ஆர்டரையும் ஏற்றுக்கொள்வோம். ஏன்னா மற்றத் தொழில் மாதிரி இல்லை இது. இதில் கற்பனைத் திறனுக்குத்தான் முக்கிய இடம்கிறதால் ஊழியர்களையும் கலைப் பொருள் களையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.
எங்க தகுதிக்கு மீறி எந்த வேலையையும் எடுத்து செய்ய மாட்டோம். பொருள்களை டிசைன் செய்ய ஜோதித்னு புரொஃபஷனல் டிசைனர் இருக்கார்!
எங்க தயாரிப்புகள் எல்லாமே எளிதில் மடிக்கப்படும் வகையில்தான் அமைந்து இருக்கும். மக்கக்கூடிய தன்மை கொண்டதால், சுற்றுச் சூழலுக்கும் கெடுதி கிடையாது.
இதை லாபகரமான தொழில்னு சொல்ல முடியாது. நலிவடைந்த தொழில் என்றும் சொல்ல முடியாது. ரெண்டுமே கலந்தது தான். தீபாவளி, பொங்கல் நேரங்களில் ஏகப்பட்ட ஆர்டர்கள் குவியும். பண்டிகைகள் முடிஞ்ச பிறகு கொஞ்சம் சிரமமா இருக்கும். சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லினு எங்க தயாரிப்புகள் பாண்டிச்சேரி எல்லைத் தாண்டி யும் விற்பனை ஆகுது. வெளிநாட்டு ஏற்றுமதிதான் அடுத்த ஆசை.
நாம செய்யற பொருள்கள் வாடிக்கையாளருக்குத் திருப்தியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தாலே போதும். லாபம் எல்லாம் அப்புறம்தான்!'' என்று புன்னகைக்கிறார் ஜோதி.

அன்பளிப்புப் பெட்டி செய்வது

சின்ன சாக்லெட்டில் இருந்து, ஸ்பெஷல் பரிசு வரை எந்த சந்தர்ப்பத்துக்கு என்ன அன்பளிப்பு கொடுத்தாலும், அதை அழகான பெட்டியில் வைத்து, அலங்கரித்துக் கொடுப்பதுதான் இப்போது ஃபேஷன். உள்ளே இருக்கும் பரிசைப் போலவே, அதைச் சுற்றியிருக்கும் அட்டையும் அலங்காரமும்கூட ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை எந்த வயதினருக்குமான பரிசுப் பொருள்களையும் வைத்துக் கொடுக்க விதம் விதமான வடிவங்களில், வெவ்வேறு அளவுகளில் பெட்டிகள் கிடைக்கின்றன இன்று. அன்பளிப்புப் பெட்டிகள் செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த மணிமேகலை.

‘‘படிச்சது கெமிஸ்ட்ரி. பேரும் பணமும் சம்பாதிச்சுக் கொடுக்கிறதென்னவோ சின்ன வயசுலேர்ந்து நான் கத்துக்கிட்ட கலைகள்தான். பேப்பர் பை மற்றும் பேப்பர் பொருள்கள் பண்ணிட்டிருந்தேன். வித்தியாசமான பொருள் எது கிடைச்சாலும், அதைப் பிரிச்சு, எப்படிப் பண்ணியிருக்காங்கனு ஆராய்ஞ்சு பார்த்து, மறுபடி அதே மாதிரி பண்றது வழக்கம். அப்படித்தான் கிஃப்ட் பெட்டியும் வித்தியாசமா இருக்கேன்னு பிரிச்சுப் பார்த்து, செய்யக் கத்துக்கிட்டேன்.

‘கிஃப்ட் டேக்’னு சொல்ற வாழ்த்து எழுதிக் கொடுக்கிற சின்னச் சின்ன அட்டைகளும் பண்றேன். பரிசு கொடுக்கற கலாசாரம் இருக்கிறவரைக்கும் இந்தப் பெட்டிகளுக்கான மவுசு குறையாது’’ என்கிற மணிமேகலை, இதைக் கற்றுக்கொண்டு பிசினஸில் இறங்க நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?


‘‘திக்கான கலர் சார்ட் பேப்பர், ரீசைக்ளிங் பேப்பர், டிஷ்யூ பேப்பர், சாட்டின் ரிப்பன், வெள்ளை கம், பன்ச்சிங் மெஷின், அலங்கரிக்க ஸ்டிக்கர்கள், சமிக்கிகள்... முதலீடு 500 முதல் 1,500 ரூபாய் வரை.’’

எத்தனை மாடல்கள்? ஒரு நாளைக்கு எத்தனை?


‘‘முயல், மிக்கி மவுஸ்னு குழந்தைகளுக்கான வடிவங்கள், பெரியவங்களுக்குக் கூடை வடிவம், சதுர வடிவம், கூம்பு வடிவம்னு கற்பனைக்கேத்தபடி எவ்வளவு மாடல் வேணா பண்ண முடியும். ஒரு நாளைக்கு 15 பெட்டிகள் வரை பண்ணலாம். பெட்டிகள் செய்யறப்ப வெட்டி எறியற குட்டி பேப்பர்கள்ல கிப்ட் டேக் பண்ணிடலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘பரிசுப் பொருள்கள் விற்பனையாகிற எல்லா கடைகள்லயும் ஆர்டர் எடுக்கலாம். பிறந்த நாள் பார்ட்டிகளுக்கு குழந்தைகளுக்கு ரிட்டர்ன் கிப்ட் போட்டுக் கொடுக்கவும் ஆர்டர் எடுக்கலாம். 25 ரூபாய்லேர்ந்து 100 ரூபாய் வரைக்கும் பெட்டிகள் இருக்கு. 50 சதவிகித லாபம் வச்சு விற்கலாம்.’’

பணம் தரும் பழைய உடை பைகள்

உடைகளுக்கும், அழகு சாதனங்களுக்கும் அடுத்தபடியாக பெண்களை அதிகம் கவர்வது கைப்பைகள். வேலைக்குச் செல்ல ஒன்று, விருந்தினர் வீட்டுக்கு ஒன்று, ஷாப்பிங் செய்ய ஒன்று என ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஒவ்வொரு விதமான பைகளை எடுத்துச் செல்ல விரும்புவது அவர்களது இயல்பு. வசதி இருப்பவர்களுக்கு அது சாத்தியம். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?

''கவலையே வேண்டாம். உங்களோட பழைய புடவை, சல்வார், ஜீன்ஸ், டாப்ஸ்னு என்ன இருந்தாலும், அதை அழகான ஹேண்ட்பேகா மாத்தலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா. பி.காம் பட்டதாரியான இவர் இன்று முழுநேர கை வினைக் கலைஞர். ஐந்நூறுக்கும் மேலான கைவினைக் கலைகள் கற்று வைத்திருக்கிற சித்ரா, வேஸ்ட் துணிகளில் வித்தியாசமான கைப்பைகள் செய்வதில் நிபுணி. ஆர்வமுள்ளோருக்கு வழிகாட்டுகிறார் அவர்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘தையல் மெஷின், பழைய புடவை, பாவாடை, சுடிதார், ஜீன்ஸ் பேன்ட், பிளவுஸ் பிட் என கைவசம் உள்ள துணிகள், ஜிப், ஃபேன்சி கைப்பிடிகள், பட்டன்கள், அலங்காரப் பொருள்கள்.... மெஷின் தவிர்த்துப் பார்த்தால் வெறும் 100 ரூபாய் முதலீடு போதும்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?

‘‘காலேஜ் பை, ஆபீஸ் பை, லேப்டாப் பை, வாட்டர் பாட்டில் பை, செல் பவுச், பர்ஸ்... இப்படி பதினைந்துக்கும் மேலான மாடல்கள் பண்ணலாம். உபயோகமில்லாத பழைய துணிகளை என்ன செய்வது என்கிற கவலையின்றி, அவற்றை இப்படி உருப்படியான, உபயோகமான பொருட்களாக மாற்றலாம். உடை தைக்கும்போது வீணாகும் பிட் துணிகளில்கூட தைக்கலாம். உடைக்கு மேட்ச்சாகவும் இருக்கும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘அக்கம்பக்கத்து வீடுகள், ஆபீஸ், காலேஜ், ஃபேன்சி ஸ்டோர் என விற்பனைக்கான வாய்ப்புகள் எக்கச்சக்கம். ஒரு நாளைக்கு 10 பைகள் வரை தைக்கலாம். ஒரு பை தைக்க நமக்கு வெறும் 100 ரூபாய்தான் செலவு. அதை 300 ரூபாய் வரை விற்கலாம். ஒரு பர்ஸ் தைக்க 20 ரூபாய். இதை 100 ரூபாய்க்கு விற்கலாம். மெட்டீரியலையும், மாடலையும் பொறுத்து, இரண்டு முதல் மூன்று மடங்கு லாபம் நிச்சயம்.’’

உபயோகித்த உடையில் பை (BAG ) செய்வோம்

சில வருடங்களுக்கு முன் உடைகள் வாங்கும் போது கூடவே அந்த கடையின் விளம்பரத்தோடு ஒரு மஞ்சள் பை கிடைக்கும்.அதிகமானோர் வீட்டில் உயர் கூடை சில அளவுகளில் டிசைன்களில் இருக்கும்.இப்போ இது இரண்டுமே உபயோகத்தில் குறைந்து விட்டது.வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க,நாகரீகமும் அதிகரித்து மக்களின் தேவைகளிலும்,உபயோகத்திலும் மாற்றங்கள்,முன்னேற்றங்கள். உபயோகிக்கும் பைகளிலும் மாற்றங்கள். பல வண்ணங்களிலும்,வடிவங்களிலும்,பைகள் வரத்தொடங்கி மக்களால் உபயோகிக்கப்படுகின்றன.தற்போது சாமானியர்கள் அதிகம் உபயோகிப்பது இரண்டு மரப்பிடிகள் கொண்ட’ கட்ட பை’ என பேச்சு வழக்கில் சொல்லப்படும் பைகள்.இந்த பைகள் தனியாக விற்கப்படுவதல்லாமல்,மஞ்சள் பை கொடுத்த துணிக் கடைகள்,மளிகை சாமான் மற்றும் சில கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும் தரப்படுபவது அனைவருக்கும் தெரிந்ததே.

வீட்டில் அன்றாடத் தேவைகளுக்கு பைகள் தேவைப்படின் தையல் கலையில் ஆர்வம் உள்ளவர்கள்,பொறுமை உள்ளவர்கள் நாம் உபயோகித்த ஆடைகள் சேலை,சுடிதார்,குறிப்பாக பேண்ட் இவற்றைக் கொண்டு வீட்டிலே பைகள் தயார் செய்யலாம்.புதிய துணிகள் கொண்டும் பைகள் செய்யலாம்.சிலருக்கு பை தைக்கும் முறைகள் தெரிந்திருக்கலாம்.

சில டிப்ஸ் பாருங்கள்

ஜீன்ஸ் பேண்ட் இல்லாத வீடுகள் இருக்காது, பழைய/பத்தாமல் போன ஜீன்ஸ் பேண்ட்டை எடுத்து தையலை
ஒரு கால் பகுதியைப் படத்தில் உள்ளவாறு பிரித்து மடித்துக் கொள்ளவும்.
பிரித்த கால் பகுதியை சரி சமமாக கத்தரித்துக் கொள்ளவும்.
பிறகு படத்தில் உள்ளவாறு துணியை பின் புறமாக திருப்பி இரு பக்க திறப்பு பகுதிகளை தைத்துக் கொள்ளவும்.குறிப்பாக நீங்கள் பைகள் தைப்பதற்கு ஜீன்ஸ்,சாதாரண பேண்ட் துணி,சேலை,சுடிதார், ஸ்க்ரீன் துணி இப்படி எந்த விதத் துணிகளாக இருந்தாலும் உடைகள் தைப்பது போல பையின் வெளிப்புறப் பிடிகள் வெளிப்புற பாக்கெட் தவிர ,உள் பாக்கெட் வைப்பது எல்லாம் துணியின் பின் புறத்தில்தான் செய்தாக வேண்டும்.அப்போதுதான் வெளிப் பக்கம் நல்லத் தோற்றம் கிடைக்கும்.

படத்தின் படி இரு பக்க வட்டிலும் தைத்த பிறகு இப்போது உங்களுக்கு
ஒரு பக்கம்(பையின் வாய்ப் பகுதி/மேல் பகுதி) திறப்பாகவும்,இதற்கு கீழ்ப் பகுதி பையின் அடிப் பகுதியாகவும் கிடைக்கும். அடிப் பகுதியின் இரு மூலையிலும் சிறிய இரு கிராஸ் தையல் போட்டுக் கொள்ளவும்
ஜீன்ஸ் துணியாக இருப்பதால் பையின் வலுவிற்கு இந்த ஒரு துணியே போதும்,மற்ற துணிகளாயின் வலுவிற்காக எந்த வடிவத்தில் பை தேவையோ அதே வடிவத்திற்கு இரண்டு அல்லது மூன்று துணிகளை அதே வடிவில் கத்தரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தையல் இடவும்.

இல்லையெனில் கடைகளில் மீட்டர் கணக்கில் போம்கள் விற்கப்படும் அதை பை வடிவத்திற்கு கட் செய்து பைத்துணி வெளியில்,நடுவில் போம்,இதற்கு மேல் ஒரு சதா துணி வைத்து தைத்து விட்டால் பையின் உள்புறம் போம் தெரியாது.

இல்லையெனில் எங்கள் பகுதி பெண்கள் சிலர் கோதுமை மாவு வாங்கும் பாலியஸ்டர் சாக்குப் பைகளை போம்கு பதிலாக கட் செய்து உள்ளே வைத்து தைத்து விடுகிறார்கள்.

பைக்கு பிடி செய்வதற்காக பிரித்த பேன்ட்டின் மீதித் துணியிலிருந்து படத்தில் உள்ளவாறு கத்தரித்து அழகாக இரு பக்கங்களிலும் மடித்து தைத்துக் கொள்ளவும்.பிடியின் நீல அகலம் நமது விருப்பம்.
பையின் மேல்பகுதி/வாய்ப்பகுதிக்கு ஜிப் வைப்பதாக இருந்தால் உள்புறமாகவே வைத்து தைத்து விடவும் ,ஜிப்களும் சில டிசைன்&கலரில் கடைகளில் கிடைக்கிறது,பிடிகளும் அப்படியே மீட்டர் கணக்கில் கடையில் கிடைக்கும்.
ஒரு பாக்கெட்டையும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதை வெளிப்புறமாக தைத்துக் கொள்வோம்.
இப்போது அழகான சிறிய பை தயார்.
இதே பை பெரிய அளவில் வேண்டுமெனில் இது ஒரு கால் பகுதி ஒரு பக்கமும்,மற்றொரு கால் பகுதி மறு பக்கத்திற்கும் சம அளவாக வெட்டிக் கொண்டால் பெரிய பை கிடைத்து விடும்.

எங்கள் பகுதியில் இந்த மாதிரியான பைகள் தைக்க சில கடைகள் உள்ளன,சாதாரண நூலே போதும்,நைலான் நூல்களும் உபயோகிக்கலாம்.








சில டிசைன்களைப் பாருங்கள்:.




. முதல் மூன்று பைகளின் முறையே மூன்று சதா பேண்ட்டுகள்,கடையில் டிசைனுக்கு ஏற்றவாறு பணம் கொடுத்து தைக்கப்பட்டது. நான்காவது எனக்கு பத்தாமல் போன சுடிதாரில் நான் தைத்த முதல் பை(மாதிரி).வலுவிற்கு துணிகள் கொடுத்து தைத்துள்ளேன்.ப்ளைன் துணியில் தைக்கும் போது மேலே பென்சிலில் படம் வரைந்து அதன் மேலே தையல் விடலாம். முதல் மூன்று பையின் மேல் பாருங்கள்,பேப்ரிக் பெயிண்டிங்,செமிக்கி வேலைப்பாடுகள் செய்யலாம் .நமது விருப்பம் . வருடக் கணக்கில் உழைக்கும்.





இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட பைகள்.முதல் இரண்டு படங்களிலிருந்து பேண்ட்டின் சைடு பக்கெட்டுகள் கத்தரிக்கப்பட்டு தனியே எடுத்து உள்புறமாக தைக்கப்படுள்ளது,இதை சுவற்றில் ஆணியில் மாற்றிவிடலாம்,எதாவது வைத்துக்கொள்ள,அல்லது மேலே பிடி தைத்து சிறு பையாக வைத்துக்கொள்ளலாம்.குழந்தைகளுக்கு விளையாட்டுப் பையாக வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த பிங்க் கலர் பையை பார்த்தவுடனே தெரியும் இது பேண்டின் மேல் பகுதி,அலங்காரத்தை பாருங்கள்,பிடியாக இருப்பது பெல்ட்.கற்பனைக்கு ஏது எல்லை.உபயோகிக்க மனம்தான் வேண்டும்.

எங்கள் பகுதிக்கு வந்தபோது அனைவரும் இது போன்ற பைகளை உபயோகிப்பதைப் பார்த்து சில கடைகளில் விசாரித்த போது சரியான பதில் இல்லை.பிறகுதான் ஒருவரிடம் தெரிந்து கொண்டேன்.இவைகள் உபயோகப் படுத்தப்பட்ட துணிகளால் தைக்கப்படுகிறது,இதற்கென தனிக் கடைகள் உள்ளன என்று,பிறகு அந்த கடைகளுக்கு சென்று பார்த்தால் ( புதுத் துணிகளும் கொடுக்கலாம்) அம்மாடி எத்தனை டிசைன்கள், சூட்கேஸ்கள் வடிவிலும் தைக்கிறார்கள். அக்கம் பக்கத்து பெண்மணிகள் சிலர் வைத்திருப்பது தன் வீட்டு மெசினில் தானே தைக்கிறார்களேன்று பிறகுதான் தெரியவந்தது. பிறகு நானும் பார்த்து கேட்டு கற்றுக் கொண்டேன்.ஆனால் அவர்கள் அளவிற்கு கச்சிதமாக தைப்பது சிரமம்தான்.

தற்போது பரவலாக பாலித்தீன் பைகள் உபயோகிக்கக் கூடாது என்பதை பலரும் அறிவோம்.இந்த மாதிரி பைகள் எல்லோரும் பயன்படுத்தினால் நல்லது

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites