இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, September 21, 2013

கோழிப்பண்ணை உபகரணங்கள் குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்கள்

1. அடை காப்பான்
Setter
அடை காப்பான்
  • இதில் அடை முட்டைகள் முதல் 19 நாட்கள் வைத்து அடைகாக்க படும். இந்த இயந்திரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் முட்டைகளை திருப்புதல் ஆகியவை கட்டுபடுத்துவதற்கான வசதிகள் உள்ளன.
2. குஞ்சு பொரிப்பான் 
  • இது அடைகாப்பானை போல இருந்தாலும் அடை முட்டைகளை திருப்புவதற்கான வசதி இல்லை. மேலும் இதில் தட்டுகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கும்.
  • இதில் அடைமுட்டைகள் அடைகாத்தல் காலத்தின் கடைசி 3 நாட்கள் இருக்கும்.
  • உலகில் காணப்படும் பல்வேறு வகையான அடைகாப்பான் மற்றும் குஞ்சுப்பொரிப்பான்கள்:
    • காரிடார் வகை பொரிப்பான்கள்
    • குகை வகை பொரிப்பான்கள்
    • செங்குத்தான காற்றாலை பொரிப்பான்கள்
3. அழுத்த காற்று அமைப்பு
  • சில அடைகாக்கும் கருவியில் அழுத்த காற்று முட்டைகள் அடங்கிய தட்டுகளை திருப்பி விட பயன்படுத்தப்படுகிறது.
  • மத்திய பெரிய அழுத்தகாற்று அமைப்பு ஒன்று தூசி தட்டவும் குஞ்சுப் பொரிப்பகத்தினை சுத்தம் செய்யவும் தேவைப்படுகிறது.
4. அவசரகால தயாரன மின் அமைப்புகள்
  • உள்ளூர் மின் வழங்கல் அமைப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத பட்சத்தில் குஞ்சுப் பொரிப்பகத்திற்கு மாற்று மின்சார அமைப்பு இருக்கவேண்டும்.
  • ஒரு நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப்பொரிப்பகத்திற்கு அருகில் அல்லது அடுத்த கட்டிடத்தில் இருக்கவேண்டும்.
  • நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப் பொரிப்பகத்தின் அனைத்து மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு இருக்கவேண்டும்.
5. குஞ்சுப் பொரிப்பகத்தில் உள்ள உபகரணங்கள்
  • குஞ்சுப் பொரிப்பானின் தட்டு கழுவிகள்
  • குப்பைகளை நீக்கும் அமைப்புகள்
  • முட்டைகளை மாற்றும் இயந்திரங்கள்
  • முட்டைக்குள் தடுப்பூசி போடும் இயந்திரங்கள்
  • குஞ்சுப் பெட்டிகள் கழுவிகள்
  • அலமாரி கழுவிகள்
  • தடுப்பூசி போடுதல் / இனம் பிரித்தல் / தரம் பிரித்தல் அமைப்புகள்
  • அதிக அழுத்த காற்றடிப்பான்கள்

முட்டைகளை கையாளும் உபகரணங்கள்


1. குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள்

  • பொதுவாக குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள் தட்டையாகவோ குழியாகவோ இருக்கும்.
  • ஒவ்வொரு தட்டிலும் 90 அல்லது 180 முட்டைகள் வைக்கலாம்.
2. அடை முட்டைகளை மாற்றும் எந்திரங்கள்
  • இதன் மூலம் பண்ணை முட்டை அட்டையிலிருந்து முட்டைகளை குஞ்சுப் பொரிக்கும் தட்டிற்கு மாற்றப்படுகிறது.
  • அதிகமாக முட்டைகளை மாற்றும் குஞ்சுப்பொரிப்பகங்களில் வெற்றிட முட்டை தூக்கிகள் உபயோகப்படுத்தபடுகிறது

முட்டை கண்டறிவான்

  • ஒளியை கொண்டு முட்டையின் உள் அமைப்புகளை காணும் கருவியாகும்.
  • ஒவ்வொரு முட்டை மற்றும் பல முட்டைகளை காணுமாறு இரண்டு வகையான முட்டை கண்டறிவான்கள் உள்ளன.

அடைகாப்பான் உபகரணங்கள்

  • இவை இளங்குஞ்சுகளுக்கு முதல் சில வாரங்கள் கதகதப்பும் மற்றும் வெளிச்சமும் கொடுக்ககூடியவை.
  • இதில் கதகதப்புக்கு என்று ஒரு உபகரணம், வெப்பம் மற்றும் வெளிச்சத்தை எதிரொலிப்பான்கள் மற்றும் உயரங்களை மாற்றி அமைக்க தேவையான வசதிகள் ஆகியவை உள்ளன.
  • அடை காக்க உபயோகப்படுத்தப்படும் சில உபகரணங்கள்:
1. கரி அடுப்பு / மண்ணெய் அடுப்பு
Charcoal stove
கரி அடுப்பு

  • இவ்வகையான அடுப்புகள் மின்சாரம் இல்லாத இடங்கள் அல்லது மின்சாரம் விலை அதிகமாக இருக்கும் இடங்களிலும், மின்சாரம் தட்டுபாடு உள்ள இடங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.
  • இவ்வகையான அடுப்புகளில் தட்டுகள் மற்றும் குழி போன்ற அமைப்புகள் உள்ளதால், அது வெப்பத்தை ரொம்ப நேரம் இருக்குமாறு செய்கிறது.
2. எரிவாயு அடைக்காப்பான்
Gas brooder
எரிவாயு அடைக்காப்பான்
  • இயற்கை எரிவாயு அல்லது திரவ பெட்ரோலிய வாயு அல்லது மீத்தேன் ஆகியவற்றின் மூலம் சூடாக்கும் கம்பி வெப்படுத்தபட்டு சுமார் 3 – 5 அடி குஞ்சுகளுக்கு மேலே அமைக்கப்படுகிறது.
  • இவ்வகை அடுப்புகளில் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு வெப்பத்தை குஞ்சுகளை நோக்கி எதிரொலிக்கப்படுகிறது.
3. மின்சார அடைக்காப்பான்கள்
Electrical brooder
மின்சார அடைக்காப்பான்கள்
  • இந்த அமைப்பில் சீரான ஒரே அளவு வெப்பம் பெரிய அளவு இடத்திற்கு இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இதனால் குஞ்சுகள் அடைக்காப்பானில் ஒரே இடத்தில் அடைவது தடுக்கப்படுகிறது.
  • ஒரு மின்சார அடைக்காப்பானை கொண்டு 300 முதல் 400 இளங்குஞ்சுகளை வளர்த்தலாம்.
4. அகச்சிவப்பு விளக்குகள்
infra-red bulbs
அகச்சிவப்பு விளக்குகள்
  • இது அதே எதிரொலிக்கும் தன்மை கொண்டுள்ளதால் தனியாக எதிரொலிப்பான்கள் தேவைப்படாது.
  • 150 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் 250 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்ககூடியது.
5. எதிரொலிப்பான்கள் அல்லது ஹொவர்கள்
  • இவ்வகை எதிரொலிப்பான்கள் ஹொவர்கள் என அழைக்கப்படுகிறது.
  • இவை வெப்பத்தையும் ஒளியையும் எதிரொலிக்ககூடியது.
i).தட்டையான ஹொவர்கள்
  • இவ்வகை தட்டையானது .இதில் சூடாகும் கம்பிகள், சூடேற்றும் அமைப்புகள் மற்றும் தலைமை விளக்கு ஆகியவை உள்ளன.சிலவற்றில் வெப்பத்தை அளவிட வெப்பமானிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
  • இவை கூரையிலிருந்து தொங்கவிடமால், நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட தூண்கள் மூலம் நிற்க வைக்கப்படுகிறது.
ii).குழி வடிவான ஹொவர்  
  • இதில் குழிவடிவான அமைப்பில் சதாரண மின்சார விளக்கும், வெப்ப நிலைப்படுத்தியும் , சில இடங்ளில் வெப்பமானியும் அமைக்கப்பட்டிருக்கும்.
6. இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு
Brooder guard
இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு

  • இவைகள் 1 – 1.5 அடி உயரம் மற்றும் வெவ்வேறு நீளம் கொண்ட மெல்லிய இரும்பு தகடுகள் , அட்டை தட்டிகள் மற்றும் மூங்கில் பாய்களாகும்.
  • இந்த தடுப்பு போன்ற அமைப்பால் கோழிக்குஞ்சுகள் புரூடரை விட்டு தள்ளி சென்று குளிரால் பாதிக்கபடாமல் தவிர்க்கப்படுகிறது.
  • இதனால் கோழிக்குஞ்சுகள் சூடான பகுதிக்கு அருகே செல்ல பழக கற்றுகொள்கிறது.
  • அடைக்காப்பானின் தடுப்பின் விட்டம் 5 அடி மற்றும் உயரம் 1.5 மிகாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
  • பருவகாலங்களை பொறுத்து அட்டை தட்டு, இரும்பு தகடு, கம்பி வலை மற்றும் பாய் ஆகியவைகளை தடுப்புகளாக பயன்படுத்தலாம்.
  • வெயிற்காலங்களில் அடைக்காக்கும் காலம் 5-6 நாட்களும் குளிர்காலங்களில் 2-3 வாரங்களும் இருக்கவேண்டும்.
7. மின்சார சூடாக்கிகள் (heating rods or coils)
Electrical brooding heaters
மின்சார சூடாக்கிகள்
  • இதில் சூடாக்கும் கம்பிகள் மற்றும் விளக்கு ஆகியவை உள்ளன. சிலவற்றில் வெப்பமானி உள்ளன.
  • சூடாக்கும் கம்பிகள் மற்றும் சுருள் கம்பிகள் மேலே எதிரொலிப்பான்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
  • இதில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிகொள்ளலாம்.

தீவன உபகரணங்கள்

  • இது கோழிகளுக்கு தீவனம் அளிக்க பயன்படுத்தபடுகிறது.
  • இது வெவ்வேறு அளவுகளில் மற்றும் மாடல்களில் பழைய வகையில் அல்லது பாதி தானியங்கி வகையில் இரும்பு அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும்.
  • தீவனத் தொட்டிகளின் வகைகள்:
1. தானியங்கி தீவன தொட்டிகள்
Automatic Feeder
தானியங்கி தீவன தொட்டிகள்
  • இவைகள் கோழிக்கொட்டகையின் மொத்த நீளத்திற்கு தள்ளி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
  • மின்சாரத்தில் இவை இயங்ககூடியது. இதன் உயரம் கோழிகளின் வயதுக்கேற்ப மாற்றி கொள்ளலாம்.
2.நீளமான தீவனத்தொட்டி
Linear Feeder
நீளமான தீவனத்தொட்டி
  • வெவ்வெறு நீளங்களில் தடுப்புகள் கொண்டவையாக கிடைக்கிறது.
  • உயரத்தை மாற்றிக்கொள்ள வசதிகள் உள்ளன.
  • இவைகள் பொதுவாக துருபிடிக்காத இரும்பினால் தயாரிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும்.
  • தீவனத்தொட்டிகள் ஆடாமல் இருக்கவும் உயரத்தை மாற்றிக்கொள்ளவும் தேவையான வசதிகள் உள்ளன.
  • கோழிகள் தீவனத்தொட்டியின் இருபுறங்களிலும் இருந்து தீவன எடுக்கும்.
  • மொத்த தீவன இடம் = 2 X தீவனத்தொட்டியின் நீளம்.
  • நீளமான தீவனத்தொட்டிகள் = (2 X தீவனத்தொட்டியின் நீளம்) ÷ தீவனத்தொட்டியின் அளவு ( செ.மீ.)
3. வட்ட தீவனத்தொட்டி
Circular Feeder
வட்ட தீவனத்தொட்டி
  • இவை பாதி தானியங்கி தீவனத்தொட்டிகள் ஆகும். இதிலுள்ள உருளை போன்ற அமைப்பில் 5 -7 கிலோ வரை போட்டு வைக்கலாம்.
  • தீவனம் மெதுவாக புவிஈர்ப்பு விசையால் தீவனத்தொட்டிக்கு கீழே செல்லும்.
  • இதில் தடுப்புகளை அமைத்து தீவன விரயத்தை தடுக்கலாம்.
  • இவைகள் பிளாஸ்டிகினால் தயாரிக்கப்படுகிறது.மேலும் இவைகள் கூரையிலிருந்து அல்லது தனியாக குழாய் அமைத்து அதில் இருந்து தொங்கவிடப்படுகிறது.
  • இவைகள் தொங்கும் தீவனத்தொட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இவைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இந்த தீவனத்தொட்டிகள் நிறைய தீவனம் ஒரு முறை இட்டால் ஏறக்குறைய 4- 7 நாட்கள் வரை கோழிகளின் வயது மற்றும் தீவனம் சாப்பிடும் எண்ணிக்கை பொறுத்து போதுமான இருக்கும்.
  • இதன் உயரத்தை சின்ன வசதி மூலம் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
  • இவைகள் வெவ்வேறு வண்ணங்ளில் பளிச்சென்று ( நீலம் மற்றும் சிவப்பு ) இருப்பதால் முட்டைகோழிகள் மற்றும் இளங்குஞ்சுகள் ஈர்க்கப்பட்டு தீவனம் உட்கொள்ளுவது எளிதாக நடைபெறுகிறது.
  • தொங்கும் தீவனத்தொட்டிகளின் எண்ணிக்கை = 1.3* ( சுற்றளவு ÷தீவன உண்ணும் இடளவு ) செ.மீ.ல்
  • நீளவாக்கு தீவனத்தொட்டிகளை விட தொங்கும் தீவனத்தொட்டிகளில் 30 சதவீதம் அதிகம் கோழிகள் தீவனம் உண்ணும்.
4. கிளிஞ்சல் பெட்டி
shell grit box
கிளிஞ்சல் பெட்டி
  • முட்டைகோழிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்காக கிளிஞ்சல் வைப்பதற்கு இவைகள் உபயோகப்படுத்தபடுகிறது.

கோழிகளுக்குத்தண்ணீர் அளிக்கும் உபகரணங்கள்


1. தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள்

  • தண்ணீரில் கலந்துள்ள அதிகமாக திடப்பொருள்களால் ஈரப்பத கட்டுபாட்டு கருவிகள், தெளிப்பான் துளைகள், ஜெட்கள், மற்றும் வால்வுகள் போன்றவற்றில் படிவங்கள் ஏற்பட்டு அதன் செயல்பாடுகளை குறைக்கின்றன.
  • தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மொத்த கரைந்துள்ள திடப்பொருள்களின் அளவை குறைக்கலாம். இந்த தண்ணீர் பிறகு குஞ்சு பொரிப்பகத்திற்கு உபயோகப்படுத்தபடுகிறது.
2. தண்ணீர் சூடாக்கிகள்
Water heater
தண்ணீர் சூடாக்கிகள்
  • வெந்நீர் குஞ்சுப்பொரிப்பக தட்டு கழுவிகள் மற்றும் பொதுவான சுத்தம் பண்ணுவதற்கு தேவைப்படுகிறது.
  • பெரிய அளவு பாய்லர் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தபடுகிறது.

தண்ணீர் தொட்டிகள்

  • தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் குடிப்பான்கள் கோழிகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படுத்தபடுகிறது.
  • இவைகள் வெவ்வேறு அளவு மற்றும் அமைப்புகளில் கிடைக்கின்றன.
1. தட்டு மற்றும் குடுவை அமைப்பு
Pan and Jar type
தட்டு மற்றும் குடுவை அமைப்பு
  • குடுவை போன்ற அமைப்பில் தண்ணீர் நிரப்பி வட்டமான தட்டு போன்ற அமைப்பில் வைத்து கோழிகளுக்கு அளிக்கப்படுகிறது.
2. நீளமான மற்றும் கால்வாய் தண்ணீர் தொட்டிகள்
  • இவைகள் பொதுவாக கூண்டுகளில் பொறுத்தபட்டு இடைவிடாத தண்ணீர் வசதி செய்யப்படுகிறது.
  • ஒரு முனையில் புனல் போன்ற அமைப்பின் மூலம் தண்ணீர் நிரப்பவும் மற்றோரு முனையில் நீரை வெளியேற்ற தேவையான வசதியும் இருக்கிறது.
3. தண்ணீர் பேசின்கள் (பிளாஸ்டிக் அல்லது மரம் அல்லது இரும்பு தடுப்புகளுடன்)
Water basin made of plastic
தண்ணீர் பேசின்கள்
  • பேசின்கள் வெவ்வேறு விட்டளவுகளில் கிடைக்கின்றன. ( 10, 12,14 மற்றும் 16 அங்குலம்)
  • தனியாக தடுப்புகள் இருப்பதால் கோழிகள் தண்ணீருக்குள் செல்லுவது தடுக்கப்படுகிறது.
4. பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்
Bell type automatic waterer
பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்
  • கடினமான பிளாஸ்டிக்கினால் ஆன இவைகள் இதற்கென அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் தொங்கவிடப்படுகிறது.
  • இதில் தண்ணீர் செல்லும் அளவை கட்டுபடுத்துவதற்கு என தனியாக அமைப்பு உள்ளதால் அதன் மூலம் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ளமுடியும்.
  • இதில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லும் வசதி இருப்பதால் நாள்முழுவதும் கோழிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
  • இந்த தண்ணீர் அளிப்பான்களின் உயரத்தையும் தண்ணீர் செல்லும் அளவையும் மாற்றுவதற்கான அமைப்புகள் இதில் உள்ளன.இந்த பிளாஸ்டிக் தண்ணீர் அளிப்பான்கள் பளபளக்கும் வண்ணங்களில் (சிவப்பு மற்றும் நீலம்) இருப்பதால் கோழி மற்றும் குஞ்சுகள் இவற்றால் கவரப்படுகிறது.
  • பெல் வகை தண்ணீர் அளிப்பான்களின் எண்ணிக்கை =1.3*(சுற்றளவு ÷ தண்ணீர் குடிக்கும் இடஅளவு)
5. நிப்பிள் தண்ணீர் அளிப்பான்
Nipple drinker
நிப்பிள் தண்ணீர் அளிப்பான்
  • இது ஆழ்கூளமுறை மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் பயன்படுத்தபடுகிறது.
  • ஆழ்கூள முறையில் நிப்பிளுக்கு கீழே கிண்ணம் அமைத்து அதன் மூலம் ஆழ்கூளம் ஈரமாவது தடுக்கப்படுகிறது.
  • நிப்பிளை அழுத்தும் போது அதில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.
  • They can be used for all types and classes of birds, but most commonly used in laying cages.
  • ஒவ்வொரு கூண்டுக்கும் ஒரு நிப்பிள் அமைத்தால் அது 3 முட்டைக்கோழிகளுக்கு போதுமானது.
6. கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்
Manual drinker
கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்
  • இளங்குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் இது அதிகமாக உபயோகப்படுத்தபடுகிறது.
  • இதில் துளையிலிருந்து ஊற்றுப்போல நீர் வருவதால் இதை ஊற்று தண்ணீர் அளிப்பான்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இதில் மருந்துகள் மற்றும் டானிக்கள் ஆகியவற்றை சுலபமாக கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.
  • இவைகள் சிவப்பு மற்றும் நீலம் வண்ணங்களில் கிடைக்கின்றன.
  • தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கு இடையே உள்ள இடவெளி 0.6 மீ இருக்குமாறு அமைக்கவேண்டும்.

VIII. தடுப்பூசி அளிக்கும் உபகரணங்கள்


1. மருந்தூசி ஊசியுடன் அல்லது தடுப்பூசி சொட்டு அளிப்பான்

  • இதைக்கொண்டு நாசித்தூவரங்களிலும் கண்களிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கலாம்.
2. தானியங்கி தடுப்பூசி அளிப்பான்
Automatic vaccinator
தானியங்கி தடுப்பூசி அளிப்பான்
  • இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக கோழிகளுக்கு கண்கள் மற்றும் மூக்கின் வழியே தடுப்பூசி மருந்துகளை இடமுடியும்.
3. கோழி அம்மை தடுப்பூசி அளிப்பான்
  • இறக்கையில் தோலுக்கடியில் தடுப்பூசி மருந்துகளை இட இது உபயோகமாக இருக்கிறது.
மேலே செல்க

IX. பிற உபகரணங்கள்


1. அலகு வெட்டி
Beak trimmer
அலகு வெட்டி
  • மின்சாரத்தால் இயங்கும் இதைக்கொண்டு கோழியின் அலகை வெட்டி கோழிகள் கொத்திகொள்ளுவதை கட்டுப்படுத்தலாம்.
  • இது 2 அல்லது 2.5 அடி உயரமுள்ள தூண் மீது பெடல் போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.பெடலை கால் மூலம் அழுத்தினால் சூடாக்கப்பபட்ட தகடு கோழியின் அலகை வெட்டுமாறு அமைக்கபட்டிருக்கும்.
  • தகட்டின் சூட்டை கட்டுபடுத்த ஒரு அமைப்பும் இந்த கருவியில் உள்ளன.
2. முட்டை பெட்டிகள்
Nest boxes
முட்டை பெட்டிகள்
  • இவை தரைவழி கோழிவளர்ப்பில் சுத்தமான முட்டை உற்பத்திக்கு உபயோகப்படுத்தபடுகிறது.
  • இவை தனியாகவும் கூட்டாகவும் மூடிக்கொள்ளும் தன்மையுடனும் கிடைக்கின்றன.
3. எடை தராசுகள்
Weighing balances
எடை தராசுகள்
  • வெவ்வேறு வகையான எடை தராசுகள் கோழிகள் மற்றும் தீவனங்களை எடைப்போட பயன்படுத்தபடுகின்றன.
4. உட்காரும் குச்சிகள்
Perches  Roost
உட்காரும் குச்சிகள்
  • தரையிலிருந்து 3 – 5 அடி உயரத்தில் மரத்திலான இவ்வமைப்புகள் மூலம் கோழிகள் நிற்க பயன்படுகிறது.
5. அலமாரிகள் 
Rake
அலமாரிகள்
  • இரும்பு மற்றும் மரத்தால் ஆனது.
  • ஆழ்கூள முறையில் ஆழ்கூளம் இதன் மேல் வைக்கப்படுகிறது.
6. தண்ணீர் தெளிப்பான்
Sprinkler
தண்ணீர் தெளிப்பான்
  • வெப்பமான பகுதிகளில் பயன்படுத்தபடுகிறது.
  • சந்தையில் கிடைக்கும் தெளிப்பான் மூலம் பண்ணை சுற்றுபுறம் மட்டுமல்லாமல் கொட்டகையின் கூரை மேல் தண்ணீர் தெளிக்க பயன்படுத்தபடுகிறது.
  • வெப்ப மற்றும் ஈரப்பதம் அதிகமான பகுதியில் மதியவேளையில் கூரையை குளிர்விக்க பயன்படுத்தபடுகிறது.
7. தெளிப்பான்
Sprayer
தெளிப்பான்
  • பல வகையான தெளிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன.
  • கையால் இயக்ககூடிய வகை கோழிப்பண்ணைகளில் உபயோகப்படுத்த மிக சரியானது.
  • இதில் உள்ள டேங்கில் தேவைப்படும் கிருமிநாசினி நிரப்பி தெளிக்கப்படுகிறது.
8. தீ துப்பாக்கி
Flame-gun
தீ துப்பாக்கி
  • மண்ணென்ணெய் மூலமோ அல்லது எரிவாயு மூலமோ இயங்கும் இந்தத் துப்பாக்கியினைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.
  • உலோகத்தாலான கம்பிகளை தீத்துப்பாக்கி கொண்டு சூடாக்குவதால் அதிலிருக்கும் அக ஒட்டுண்ணிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் இளங்கூட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன.

Monday, September 16, 2013

கும்பகோணம் வெற்றிலை

கும்பகோணம் வெற்றிலை என்று சொன்னாலும், வெற்றிலை எல்லாம் பயிரிடபடுவது என்பது அதன் சுற்று வட்டார பகுதிகளில்தான், அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு என்று பல ஊர்களில் இருந்து கும்பகோணம் வருகிறது !

வெத்தலை போட்ட ஷோக்குல......நான் கப்புன்னு குத்துனே......!!

கரும் பச்சை என்பது ஆண் வெற்றிலை...... இளம் பச்சை என்பது பெண் வெற்றிலை !




வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வது, வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால்தான் ! வெற்றிலை என்று நாம் சொன்னாலும் அதன் பெயர் காரணம் என்னவென்று தெரியுமா ? எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும், இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் ஜாஸ்தி தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில் கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் மூன்று வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம் !









வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை, அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள், இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகாளாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம், ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு..... கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை; மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை. இதையே வேளாண்மை அறிவியல்படி பார்த்தால்..... கற்பூரி மற்றும் அல்லது எஸ்.ஜி.எம் 1, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா வகைகள்.

வெற்றிலை கொடியை மூங்கிலின் மேல் படர விடுவது ஒரு வகை....

வெற்றிலை கொடியை மரத்தின் மீது படர விடுவது ஒரு வகை...

வெற்றிலை கொடியை பந்தல் போட்டு படர விடுவது ஒரு வகை....

அது என்ன கும்பகோணம் பகுதியில் மட்டும் வெற்றிலை அவ்வளவு பேமஸ் என்று கேட்பவர்களுக்கு........ வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது என்கிறார்கள் கும்பகோணம் மக்கள்.

 









இந்த கட்டுரை மற்றும் படம் சுட்டது நன்றி :http://www.kadalpayanangal.com

இரகங்கள் : கற்பூரி மற்றும் அல்லது எஸ்.ஜி.எம் 1, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா வகைகள்.
 மண் : வடிகால் கொண்ட வண்டல் மண் கலந்த களிமண், களர் மற்றும் உவர் மண் உகந்தவை அல்ல.
அகத்தி விதைப்பு : தை - பங்குனி (சனவரி - மார்ச் 2) ஆனி - ஆவணி (சூன் – ஆகஸ்ட்)
கொடி நடும் பருவம் 1) பங்குனி – சித்திரை (மார்ச் - மே), 2) ஆவணி – புரட்டாசி (ஆகஸ்ட் - அக்டோபர்)
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு பண்படுத்தி ஒரு மீட்டர் அகலதம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். நீளம் வயலின் அமைப்புக்கேற்ப ருக்கலாம். பாத்திகளின் உயரம் 0.5 மீட்டர் இருத்தல்வேண்டும். மேட்டுப்பாத்திகளில் இரட்டை வரிசைகளாக அகத்தி விதைகளை 30 செ.மீ இடைவெளிகளில் விதைக்கலாம். ஓரங்களில் வாழை கட்டைகளை நடவு செய்யலாம்.
பயிர்இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு 
(கிலோ)
தழை
மணி
சாம்பல்
10:26:26
யூரியா
சூப்பர் பாஸ்பேட்
வெற்றிலைஅடியுரமாக
37.5
100
50
193
40
313
மேலுரம்
(3 தவணைகளாக)
112.5
0
0
0
245
0
விதையும் விதைப்பும்
விதைக்கொடிகள் : வெற்றிலைக் கொடிகளைப் பட்டங்களில்  45 செ.மீ இடைவெளியில்  இரண்டு வரிசைகளில் நடவு செய்யவும். வரிசைக்குள் இடைவெளி மாறுபடும் விவரம் பின்வருமாறு
வரிசைக்குள் இடைவெளிஏக்கருக்குஎக்டருக்கு
ஒரு கொடிஇரட்டைக்கொடிஒரு கொடிஇரட்டைக்கொடி
20 செ.மீ20,00040,00050,0001,00,000
30 செ.மீ (1 அடி)12,00024,00030,00060,000
45 செ.மீ (11/2 அடி)9,00018,00022,50045,000
விதைக்கொடி நேர்த்தி
  • விதைக்கொடிகளை, தாய் கொடியின் நுனியிலிருந்து முதல் மூன்று அடி வரை நறுக்கி, அதனை மூன்று துண்டுகளாக்கி நடவு செய்யவும். விதைக்கொடிகளில் 4-5 கனுக்குள் இருப்பது உகந்தது.
  • விதைக்கொடிகளை நடும் முன் 6 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்ட சாணக்குழம்பில் அடிப்பகுதிகளை 10 நிமிடம் ஊறவைத்து நடுவதன் மூலம் வேர்கள் துரிதமாக வளரும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
  • கொடிகள் நட்ட 40 நாட்களுக்குப்பிறகு 20 நாட்கள் இடைவெளியில் கொடிகளை வாழை நார் கொண்டு கட்டவும்.

  • நட்ட 50 ஆம் நாள் தொழு உரம் 3-5 டன் இடவும்.
  • தொழு உரத்துடன், இரசாயன உரங்களை 150:100:50 கிலோ / எக்டர் என்ற அளவில் இடவேண்டும். மணி மற்றும் சாம்பலை சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். தழைச்சத்தை 4 தவணைகளாக 45 நாட்கள் இடைவெளியில் இடவும். முதல்  தவணையை அடியுரமாக தொழு உரத்துடன் கொடுக்கவும்.

  • 150 கிலோ தழைச்சத்தை சம அளவில் யூரியா மற்றும் தொழு உரம் வாயிலாகக் கொடுக்கலாம்.
  • தழைச்சத்தை வேப்பம் புண்ணாக்கு கலந்து யூரியாவாக இருப்பின், 100 கிலோ தழைச்சத்து / எக்டர்  போதுமானது.

  • அகத்திச் செடிகளை 2 மீட்டர் உயரம் வரை  ஒரு தண்டாக வளர்த்து நுனிகளைக் கிள்ளுதல் வேண்டும்.
  •  பொதுவாக கொடிகள் வருடத்தில் 3 மீட்டர் வரை வளரும். கொடிகள் குறுக்கு விட்டங்கள் உயரம் வந்தவுடன், கீழ் இறக்கி, மடித்துக் கட்டுவதன் மூலம், தூர்களின் எண்ணிக்கை கூடி மகசூல் கூடும்.

  • கொடிகள் நட்ட 5ஆம் மாதம், டிரையா காண்டனால்  என்ற பயிர் ஊக்கியை அரை மிலி / லிட்டர் (500 பிபிஎம்) என்ற அடர்த்தியில், மாதத் தவணைகளில் மூன்று முறை தெளித்து மகசூலைக் கூட்டலாம்.
  • சிங்சல்பேட் 5 கிராம்/ லிட்டர் என்ற அடர்த்தியில் 20 நாட்கள் இடைவெளியில் தெளித்து வெற்றிலையின் மகசூலைக் கூட்டலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அகத்திக் காலில் பூச்சிக் கட்டுப்பாடு
அகத்தியைத் தாக்கும்  தண்டு துளைப்பான்கள், சாறு உறிங்சும் பூச்சிகள் மற்றும் இலைத் துளைப்பான்கள் நன்கு கட்டுப்படுத்த அகத்தி விதைத்த 20ம் நாள் ஒரு முறையும் பிறகு 50ம் நாள் ஒரு முறையும் அகத்திக் கால்களை ஒட்டடி கார்போபியூரான் குருணை மருந்து பத்துப் பட்டங்களுக்கு (சுமார் 2000 தானங்கள்) போதுமானது.
குருணை மருந்து இட்டபின் 40 நாட்கள் வரை அகத்தித் தலைகளை தீவனமாகவோ வீட்டு உபயோகத்திற்கோ கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், குருணை மருந்திக் எஞ்சிய நஞ்சு 40 நாட்க்ள வரை அதிகமாக இருக்கும். எக்காரணம் கொண்டும். குருணை மருந்துகளை வெற்றிலைக் கொடி நடவு செய்த பிறகு இடக்சகூடாது. (அல்லது) வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ மண்ணில் இட்டு மாதம் ஒரு முறை வேப்பம் கொட்டைச்சாறு 5 சதம் (அல்லது)வேப்பம் எண்ணெய் 2 சதம், காதி கோபுர சோப்புடன் (ஒரு கிராம் / லிட்டர்) கலந்து தெளிப்பதினால்  தண்டு துளைப்பானின் சேதாரம் குறையும்.
செதில்பூச்சி மற்றும் மாவுப்பூச்சி
  • பூண்டுச்சாறு 2 சதம், வேப்பெண்ணெய் 2 சதம், காதி கோபுர சோப் / டீப்பால் 1 மில்லி / லிட்டர் 15 நாள் இடைவெளியில் ஒரு முறை (அல்லது) குளோரிபைரிபாஸ்  2 மில்லி / லிட்டர்.
சிவப்பு சிலந்தி
  • நனையும் கந்தகம் 2 கிராம் / லிட்டர் (அல்லது) ஈதியான் 50 இசி 1 மில்லி / லிட்டர் பூச்சி மருந்துகளான குளோரிபைரிபாஸ் (அல்லது) ஈதியான் தெளித்த பின் 21 நாட்கள் இடைவெளியிட்டு இலைகளைப் பறிக்கவும்.
வேர் அழுகல் நோய்
  • சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட சிறுகமணி - 1 என்ற வெற்றிலை இரகம் வேர் அழுகல் நோயை எதிர்த்து வளரக்கூடிய தன்மை கொண்டது. ஆதலால், சிறுகமணி - 1 என்ற வெற்றிலை இரகத்தைப் பயிரிடுவதன் முலும் வேர் அழுகல் நோழய வெகுவாகத் தடுக்கலாம்.

  • கொடிக்கால்  நடவு செய்யும் பொழுது, நோய்த் தாக்காத கொடிகளில் இருந்து, விதைக்கொடிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  • விதைக் கொடிகளை நடுமுன், போர்டோ மருந்துக் கலவையில்ஈ 5 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நடவேண்டும். இதற்கு 0.25 சத போர்டோக்கலவை தயாரித்து, இத்துடன் ஸ்ட்ரெப்டோசைக்ளின் மருந்தை ஒரு லிட்டர் போர்டோக்கலவைக்கு 0.5 கிராம் என்ற அளவில் கலக்கவேண்டும்.
  • இந்நோயின் பூசண வித்துக்கள், நோய் தாக்கிய கொடிகளிலும், இலைகளிலும் நிறைந்துள்ளதால் ஆதலால் நோய் தாக்கிய கொடிகளை உடனே அப்புறப்படுத்தி, எரித்திவிடவேண்டும். இதனால் மற்ற கொடிகளுக்கு நோய் பரவுவதைக் குறைக்கலாம்.

  • நோய் தாக்கும் காலங்களான அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம்  வரை ஒவ்வொரு மாதமும் 0.25 சத போர்டோக்கலவை தயார்  செய்து பட்டங்களில் இரு மாதமும் 0.25 சத போர்டோக்கலவை தயார் செய்து பட்டங்களில் இரு வரிசைகளுக்கு இடைவெளியில் பார் வாங்கி வேர் நனையும்படி மண்ணில் ஊற்றவேண்டும். போர்டோக் கலவை தயார் செய்ய இயலாவிட்டால், தாமிர பூசணக் கொல்லி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து மண்ணில் பார் வாங்க ஊற்றவேண்டும்.
  • வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா என்ற எதிர் பூசணத்தையும் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ ட்ரைக்கோடெர்மா பொடியை நன்கு மக்கிய 100 கிலோ தொழு உரம்  மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் நன்றாகக் கலந்து மூன்று மாதங்கள் இடைவெளியில் கொடியைச் சுற்றி மண்ணில் இடவேண்டும்.

  • ஒரு ஏக்கருக்கு நிழலில் உலர்த்திய எருக்கந்தலை அல்லது வேப்பந்தலைகளை 1.5 டன்ட என்ற அளவில் இடவேண்டும்.
  • கடலைப் புண்ணாக்கை அதிகமாக வெற்றிலைக்கு அல்லது வேப்பந்தலைகளை 1.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

  • மழை மற்றும் குளிர் காலங்களில் பட்டங்களில் நன்கு காயவிட்டு கொடிக்கால் சுகாதாரத்தைப் பராமரிக்கவேண்டும்.
விதைக்கொடி அழுகல்நோய்
  • விதைக்கொடிகளை நடவுக்குத் தேர்வு செய்யும் போது, நோயற்ற நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் இருந்து விதைக் கொடிகள் எடுக்கவேண்டும்.

  • 0.25 சத போர்டோக் கலவையுடன் 1 லிட்டருக்கு 0.5 கிராம் ஸ்ரெப்டோ சைக்கிளின் என்ற விகிதத்தில் கலந்து விதைக்கொடிகளை இக்கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து பிறகு நடவேண்டும்.
  • விதைக்கொடிகளை நடுமுன், எதிர்ப்பூசணமாக ட்ரைக்கோடடெர்மாவை (ஏக்கருக்கு ட்ரைக்கொடெர்மா) 1 கிலொ + மக்கிய தொழு உரம் 100 கிலோ  + வேப்பம் புண்ணாக்கு20 கிலோ ) மண்ணில் இடவேண்டும்.
பாக்டீரியா இலைக்கருகல் மற்றும கருந்தாள் நோய்
  • இந்நோயினால், அதிகம் பாதிக்கப்படாத சிறுகமணி - 1  என்ற வெற்றிலை இரகத்தைப் பயிர் செய்யலாம்.
  • நோய் தாக்காத வெற்றிலைத் தோட்டங்களில் இருந்து விதைக்கொடிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  • நோய் தாக்கப்பட்ட  கொடிகள் மற்றும் இலைகளைச் சேகரிதது வயலுக்கு வெளியே கொண்டு எரித்துவிடவேண்டும்.
  • நோய் தோன்றியவுடன் ஸ்ரெப்டேதசைக்கிளின் கலந்த 0.25 சத போர்டோக்கலவையை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும். போர்டோக்கலவையை தயாரிக்க இயலவில்லையெனில் தாமிர பூசணக் கொல்லி மருந்து ஒன்ளை ஒரு லிட்டருக்கு 2.5 கிராமுடன், பிளாஸ்டோமைசின் அல்லது ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 0.5 கிராம் கலந்தும் தெளிக்கலாம். கிடங்குப் பயிராக இருந்தாலும் பாத்திப் பயிராக இருந்தாலும் கொடி இறக்கிக் கட்டும் பயிராக முன்பும், கொடி இறக்கிக் கட்டிய ஒரு தடவை மருந்து தெளிக்கவேண்டும்.
தீச்சல் நோய்
நோய் தாக்கிய இலைகளைப் பறித்து வயலுக்கு வெளியே கொண்டு வந்து எரித்துவிடவேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டவுடன் திரம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வீதம் கலந்தோ அல்லது 0.25 சத போர்டோக்கலவையையோ 15 நாட்கள் இடைவெளியில்  3 முறை தெளிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் வெற்றிலை கிள்ளிய பிறகே மருந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
கொடிகள் 5 மாதங்கள் முடிந்தவுடன் மூன்று வார இடைவெளியில் வெற்றிரலையைக் கிள்ளலாம். 75-100 இலட்சம் இலைகள் / எக்டர் / வருடம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites